மயில் செய்த வேலையால் செந்தில்-மீனாவிற்கு மீண்டும் ஏற்பட்ட பிரச்சனை...பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் குடும்பங்கள் கொண்டாடும் தொடராக ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.
இப்போது சீரியலில், மயில்-சரவணன் விவாகரத்து பிரச்சனை, கதிர்-ராஜி திருமணத்தை மறைத்ததால் கோமதி மீது பாண்டியன் கோபமாக இருப்பது, செந்தில்-மீனா மீது கோபமாக இருப்பதும் கதையில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த வார கதைக்களத்தின் புரொமோவில், சரவணனுக்கு புதிய ஜோடி வந்துள்ளது போல் தெரிகிறது, மகாநதி சீரியல் புகழ் ஷதிகா பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
எபிசோட்
இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோடில், சரவணனும் புதிய இன்ட்ரோ கொடுத்துள்ள அஞ்சலி என்பவரின் காட்சி காட்டப்படுகிறது. இருவரும் சாதாரணமான பேசிக் கொள்கிறார்கள், அடுத்து கதிர்-ராஜி ஜாலியாக பேசிக்கொண்டு இருக்கும் காட்சிகள் வருகிறது.

அடுத்து மீனா மீது கோபமாக இருக்கும் செந்தில் தனது அம்மா பேசியதால் மனம் மாறி மனைவியுடனான சண்டையை முடித்துக் கொள்கிறார். செந்தில்-மீனா இருவரும் சண்டை போடுவதை விடுத்து ஜாலியாக கொஞ்சி பேசிக்கொள்கிறார்கள்.

அந்த நேரத்தில் மயில் மீனாவிற்கு போன் செய்ய அதைப்பார்த்த செந்தில் மீண்டும் கோபப்பட்டு மீனாவிடம் சண்டை போட்டு கிளம்புகிறார்.
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri
மெர்சல் பிரச்சனை: விஜய்- எடப்பாடி சந்திப்பு- இரவோடு இரவாக தீர்வு: அமைச்சர் சொன்ன தகவல் IBC Tamilnadu