கோமதி செய்த காரியத்தால் கடும் ஷாக்கில் பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய்யில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சரவணன்-மயில் விவாகரத்து பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கிறது.
சிறகடிக்க ஆசை சீரியல் போல் பையன் விவாகரத்த கொடுக்க முன்வந்தாலும் பெண் விவாகரத்து கொடுக்க மாட்டேன் என உறுதியாக உள்ளார்.
இந்த பிரச்சனைகளுக்கு நடுவில் மயில் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்க எப்படியோ காப்பாற்றப்பட்டார். தற்போது மீனாவிடம் தனக்கு வேலை தேடித்தருமாறு கேட்டுள்ளார் மயில்.

எபிசோட்
குமார் திருமண ஏற்பாடு நடக்கிறது, வீட்டிற்கு வந்த பெண் வீட்டார் எல்லாவற்றிற்கும் சம்மதம் தெரிவிக்க தட்டை மாற்றிக்கொள்கிறார்கள். ஆனால் குமாரு இந்த திருமணத்தில் சம்மதம் இல்லை என்பது போல் நிற்கிறார்.
பின் ராஜி, மீனாவிற்கு போன் செய்து அம்மா சாப்பிடவில்லை என கூற அவர் வீட்டிற்கு வருகிறார். கோமதியை எப்படியோ சமாதானப்படுத்தி சாப்பிட வைக்கிறார், அதன்பின் ஒரு யோசனையும் கொடுக்கிறார்.

மாமா கொஞ்சம் ஓவராக தான் செய்கிறார், அவரை இனி நீங்கள் கண்டுகொள்ளாதீர்கள் என்கிறார். அரசி, கதிர், சரவணன், பாண்டியன் என 4 பேரும் ஹாலில் உட்கார்ந்திருக்க கோமதியிடம் பணப் பையை நீட்டுகுகிறார் பாண்டியன்.
ஆனால் அதை அவர் கண்டுகொள்ளாமல் செல்ல பாண்டியன் செம ஷாக் ஆகிறார். அதேபோல் சாப்பிடும் இடத்தில் கோமதி எல்லோருக்கும் சாப்பாடு பரிமாற பாண்டியனுக்கு மட்டும் எதுவும் செய்யவில்லை.

இதையெல்லாம் பார்த்த பாண்டியன் சாப்பிடாமல் அந்த இடத்தை விட்டு கிளம்புகிறார். அடுத்து என்ன நடக்கப்போகிறது சமாதானம் ஆவாரா என்பதை அடுத்த வாரம் காண்போம்.
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்த வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் IBC Tamilnadu