காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
முத்தவேல், சக்திவேல், பழனி, கோமதி என்ற 4 பேரின் வாழ்க்கை கதையாக குடும்பங்கள் கொண்டாடும் தொடராக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்.
நேற்றைய எபிசோடில், குமார் திருமணத்தை தனது அம்மா காந்திமதி தான் நிறுத்தினார் என்பதை அறிந்துகொண்டு செம கோபப்படுகிறார் சக்திவேல்.

ஆனால் இன்னொரு பக்கம் குமார் நிச்சயதார்த்தம் நின்றது எனக்கு சந்தோஷம் தான் பழனியிடம் கூறுகிறார்.
பழனிக்கும், அரசி-குமார் இருவரும் ஒருவரையொருவர் பாசம் வைத்துள்ளார்கள் என்பதை புரிந்துகொள்கிறார்.

எபிசோட்
இன்றைய எபிசோடில், செம கோபத்தில் இருந்த சக்திவேல் வீட்டிற்கு வந்து தனது ஆத்தாவிடம் செம கோபப்படுகிறார். ஆத்தா என்பதால் ஒன்னும் பண்ண முடியவில்லை வேறொருவராக இருந்தால் வெட்டி இருப்பேன் என்கிறார்.

பின் கோபம் தாளாக சக்திவேல் தனது ஆத்தாவை வீட்டைவிட்டு வெளியே துரத்துகிறார். அதைப்பார்த்த கோமதி தனது ஆத்தாவிற்கு ஆதரவாக வந்து சக்திவேலை வெளுத்து வாங்குகிறார்.

தனது அம்மாவை நான் இருக்கிறேன் என கூறி வீட்டிற்கு அழைத்து வருகிறார். கோமதி தனது அம்மாவை வீட்டிற்கு அழைத்து வந்து பாசமாக கவனிக்கிறார்.

ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri