அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் குடும்பங்கள் கொண்டாடும் தொடராக பல வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. முதல் சீசனிற்கு கிடைத்த வரவேற்பை விட 2வது சீசனிற்கு அமோக வரவேற்பு உள்ளது.
நேற்றைய எபிசோடில், தன்னை காப்பாற்றிய அண்ணன்களுக்கு நன்றி கூறும் வகையில் அவர்களை தன் வீட்டிற்கு சாப்பிட அழைக்க கோமதி பல வருடங்களுக்கு பிறகு தனது அம்மா வீட்டிற்கு சென்றார்.

அவரைப் பார்த்ததும் அவரது அம்மா, அண்ணி என அனைவரும் சந்தோஷமாக அழைக்கிறார்கள். ஆனால் அவரது அண்ணன்கள் அப்படி செய்யவில்லை, கோபத்தை வெளிப்படுத்த நான் இங்கே வந்தது தவறு தான் என மன்னிப்பு கேட்டுவிட்டு செல்கிறார் கோமதி.

எபிசோட்
இன்றைய எபிசோடில், கோமதி அவரது அம்மா வீட்டிற்கு சென்றதை பார்த்த பாண்டியன் எதுவும் கோபப்படவில்லை, மாறாக அவர்கள் நாம் ஆபத்தில் இருந்தபோது காப்பாற்றினார்கள்.

அவர்கள் ஏதாவது ஆபத்தில் இருந்தால் நாம் கண்டிப்பாக உதவி செய்வோம், அவ்வளவு தான். மற்றபடி இரு குடும்பமும் ஒன்று கூடுவது என்பது சரியாக வராது என கூறினார்.
பின் சரவணன், மயில் விஷயம் பற்றி கூற கோமதி செம கோபப்படுகிறார். அடுத்து அப்பத்தா தனது மகன்களிடம் கோமதி குறித்து எமோஷ்னலாக பேசுகிறார், அதைக் கேட்டதும் முத்துவேல்-சக்திவேல் முதலில் முரண்டு பிடிக்க பின் தனது அம்மா கண்ணீர்விட்டதும் ஒப்புக் கொள்கிறார்கள்.

இதனால் அப்பத்தா சந்தோஷப்பட பழனிவேல் தனது அக்கா வீட்டிற்கு வருகிறார். வந்து அண்ணன்கள் இன்று மதிய உணவிற்கு வீட்டிற்கு வர ஒப்புக்கொண்டதாக கூற கோமதி சந்தோஷத்தில் என்ன செய்வது என தெரியாமல் துள்ளிக் குதிக்கிறார்.
