கோமதிக்கு மீண்டும் உடைந்த அம்மா வீட்டின் உறவு, ஷாக்கில் பாண்டியன் செய்த விஷயம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, விஜய் தொலைக்காட்சியில் குடும்ப பாங்கான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகும் ஒரு சீரியல்.
இப்போது கதையில் தனது குடும்பத்தை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய அண்ணன்களுக்கு வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுக்கிறார். அண்ணன்கள் வீட்டிற்கு வருகிறார்கள் என்பதால் தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்கிறார்.
விருந்து வீட்டிற்கு வந்ததில் இருந்து கொஞ்சம் தவறாராகவே பேசினார்கள். கடைசியில் சாப்பிட உட்காருகிறார்கள் அப்போது ஆரம்பிக்கிறது பிரச்சனை.

எபிசோட்
தனது மகனை அண்ணன் தரக்குறைவாக பேசுவது தாங்க முடியாமல் கோமதி கதிர்-ராஜி திருமணத்தை நான் தான் நடத்தி வைத்தேன் என கூற இரண்டு குடும்பத்தினரும் செம ஷாக் ஆகிறார்கள்.
இத்னால் கோபத்தில் கோமதி அண்ணன்கள் இரண்டு குடும்பமும் எப்போது சேராது என கோபத்தில் சாப்பிடாமல் வீட்டைவிட்டு வெளியே செல்கிறார்கள்.

இந்த பக்கம் பார்த்தால் கோமதி இவ்வளவு பெரிய உண்மையை தன்னிடம் மறைத்துவிட்டாரே என பாண்டியன் செம ஷாக் ஆகிறார். கூடவே செந்தில்-ராஜி தனது அம்மாவை பற்றி கோபத்தில் திட்டுகிறார்கள்.

கோமதி எல்லோரும் நிறுத்துங்கள் நான் எனது கணவரிடம் பேசுகிறேன் என பாண்டியனிடம் பேச வர அவர் கோத்தில் வீட்டைவிட்டு வெளியே செல்கிறார். அவர் கோவிலில் சென்று அமர அவரை கதிர் சந்தித்து தனது அம்மாவிற்காக பேசுகிறார்.
ஆனால் அவரது பேச்சை பாண்டியன் கேட்பதாக இல்லை, அவரது கோபமும் குறைவது போல் தெரியவில்லை.