ஜாமினில் வெளியே வந்தாலும் மயில் குடும்பத்தினர் பாண்டியனுக்கு கொடுக்கப்போகும் அடுத்த அதிர்ச்சி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் நிறைய சீரியல்கள் பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. அப்படி அடுத்து என்ன, என்ன என்று ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் ஒரு கதைக்களமாக உள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ 2.
சரவணன் மயிலுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால் அவரது அம்மா போலீஸ் நிலையம் சென்று பாண்டியன் குடும்பத்தின் மீது பொய் புகார் கூறுகிறார்.
இதனால் காவல் துறையினர் பாண்டியன் குடும்பத்தினர் அனைவரையும் ஜெயிலில் அடைத்தனர், அந்த காட்சிகள் தான் கடந்த சில நாட்களாக ஒளிபரப்பானது.

இன்றைய எபிசோட்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில், நீதிமன்றத்தில் மயில்-பாண்டியன் இருதரப்பு வக்கீல்களும் அவரவர் வாதங்களை வைத்தனர்.
முத்துவேல்-சக்திவேல் ஆகியோரின் சாட்சி முக்கியமாக பார்க்கப்பட பின் பாண்டியன் குடும்பத்தினருக்கு ஜாமின் கிடைத்தது. மயில் தரப்பு வைத்த குற்றச்சாட்டு எல்லாம் பொய் என்றும் நிரூபித்தனர்.

எபிசோட் கடைசியில் தான் ஒரு பெரிய ஷாக். அது என்னவென்றால் மயிலின் அம்மா அவர்கள் போட்ட நகைகளை கேட்டுள்ளார். ஆனால் 80 சவரனில் 8 சவரன் மட்டுமே தங்கம் மற்றது எல்லாம் கவரிங் என்பது பாண்டியன் குடும்பத்தினருக்கு தெரியாது.
பொய் புகார் அளித்து குடும்பத்தையே ஜெயிலில் அடைத்த மயில் அம்மா இப்போது நகையை காரணமாக வைத்து என்ன பிரச்சனை செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து காண்போம்.

தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri