மயில் பிரச்சனைக்கு நடுவில் தனது அப்பா வீட்டிற்கு சென்ற ராஜி, பரபரப்பு எபிசோட்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பரபரப்பான கதைக்களத்துடன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 2.
இப்போது என்ன கதை என்றால், மயில் பொய் சொல்லி திருமணம் செய்துவிட்டு மேலும் மேலும் பொய் கூறி பாண்டியன் குடும்பத்தை கஷ்டப்படுத்தி வருகிறார். குடும்பத்தினர் மீது பொய் புகார் அளிக்க பாண்டியன் மொத்த குடும்பமும் கைது செய்யப்பட்டனர்.

ஜெயிலில் இருந்து வெளியே வர உடனே மயில் அம்மா நகை வைத்து பிரச்சனை செய்ய நினைத்தார், ஆனால் மயில் உண்மை கூறியதால் பிரச்சனை முடிந்தது. தற்போது பாண்டியன்-கோமதி, மயில் உடைமைகள் அனைத்தையும் அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்கள்.
எபிசோட்
இன்றைய எபிசோடில், வீட்டிற்கு வந்த தனது அனைத்து பொருள்களையும் பார்த்த மயில் கதறி கதறி அழுகிறார். ஆனாலும் மயிலின் அம்மா, கோர்ட் வழக்கில் உள்ளது, அதில் இருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை நான் பார்க்கிறேன் என கூறுகிறார்.

இன்னொரு பக்கம் பழனி, ராஜியிடம் அவர் கொடுத்த கடிதம் பற்றியும், அவரது அப்பா மீண்டும் மீண்டும் படித்தது குறித்தும் பேச உடனே ராஜி வீட்டிற்கு செல்லவா என்கிறார்.
பழனி ஒரு பிரச்சனையும் வராது என கூற அவர் தனது அப்பா வீட்டிற்கு செல்கிறார். ஆனால் அடுத்து என்ன நடக்குமோ, நாளைய எபிசோடில் காண்போம்.
டிரம்பை நம்பி ஏமாந்த ஈரான் போராட்டக்காரர்கள்: அமெரிக்கா நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது ஏன்? News Lankasri
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri