தனது அப்பா வீட்டிற்கு சென்ற ராஜிக்கு நடந்தது என்ன தெரியுமா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
குடும்பங்கள் கொண்டாடும் தொடராக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.
கதையில் கடந்த வாரங்கள் எல்லாம் மயில் அம்மா செய்த பிரச்சனையால் பாண்டியன் குடும்பமே கடும் சோகத்தை சந்தித்தார்கள். ஜெயிலில் இருந்தவர்களை கோமதி அண்ணன்கள் எப்படியோ காப்பாற்றிவிட்டனர்.
மயில் அம்மா நகை வைத்து பிரச்சனை செய்ய நினைக்க எப்படியோ மயிலே உண்மையை சொல்லி காப்பாற்றிவிட்டார்.

எபிசோட்
இன்றைய எபிசோடில், ராஜி தனது அப்பா வீட்டிற்கு செல்கிறார். அவரை பார்த்த சக்திவேல்-முத்துவேல் எதுவும் பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை, அமைதியாக சென்றுவிட்டனர். முத்துவேல் ராஜியை பார்த்து எதுவும் சொல்லாதது சக்திவேலுக்கு பிடிக்கவே இல்லை.

ராஜி மீது அண்ணனுக்கு பாசம் வருகிறது அப்படி நடக்கக் கூடாது. ராஜி வந்தால் உடனே கோமதியும் வந்துவிடுவாள்.
அப்படி இருவரும் உள்ளே வந்தால் சொத்து மூன்றாக பிரியும் அப்படி நடக்கக் கூடாது. அண்ணன் சொத்து அப்படியே எனக்கு வர வேண்டும், அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என தனது மகனிடம் கூறி யோசிக்கிறார்.

பின் ராஜி, தனது அம்மா, சித்தி, அப்பத்தா என எல்லோருடனும் சந்தோஷமாக பேசுகிறார். அங்கு நடந்த விஷயங்களை தனது வீட்டிற்கு வந்து கோமதியிடம் கூறி சந்தோஷப்படுகிறார்.