உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய்யில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் கடந்த சில வாரங்களாக மிகவும் பரபரப்பான கதைக்களமாக செல்கிறது.
மயில் உண்மை பாண்டியன் வீட்டிற்கு தெரியவர அவர்கள் வீட்டைவிட்டு அனுப்ப விவாகரத்து கொடுத்தார்கள்.
ஆனால் மயில் அம்மா விவாகரத்து வந்ததால் போலீஸ் நிலையம் சென்று பாண்டியன் குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை புகார் கொடுக்க குடும்பமே ஜெயில் சென்றார்கள்.

பின் கோமதி அண்ணன்களால் வெளியே வர மயில் அம்மா நகை வைத்து பிரச்சனை செய்ய உண்மை வெளியே வந்ததால் பிரச்சனை முடிந்தது.
உடனே அடுத்த பிரச்சனை ஆரம்பமானது. கோமதி நல்ல எண்ணத்தில் அண்ணன்களை வீட்டிற்கு சாப்பிட அழைக்க சக்திவேல் பேசிய பேச்சால் கோமதி, கதிர்-ராஜி திருமணம் பற்றி பேச இப்போது பிரச்சனை பெரியதாக வெடித்துள்ளது.

இன்றைய எபிசோட்
தனது மனைவி தன்னிடம் உண்மையை மறைத்துவிட்டார் என்பதை அறிந்த பாண்டியன் வீட்டைவிட்டு வௌயே செல்ல கதிர் கண்டுபிடிக்க சென்றார். இன்னொரு பக்கம் வீட்டில் மீனா-செந்தில் சண்டை போடுகிறார்கள்.

மீனா நான் செய்தது சரி என கூற செந்திலோ நீ செய்தது தவறு என கூறி அவரை வீட்டிற்கு அழைத்து செல்கிறார். அங்கே சென்றவர்கள் கடுமையாக சண்டை போட கோபத்தில் செந்தில் இனி நமக்குள் பேச்சே வேண்டாம், நாம் பேசிக்கொள்ளவே வேண்டாம் என்கிறார்.
பாண்டியன் கதிர் எப்படியோ பேசி வீட்டிற்கு அழைத்து வருகிறார். பாண்டியனிடம் கோமதி நடந்த விஷயம் குறித்து சொல்ல முயற்சிக்கிறார் ஆனால் அவர் கேட்பதாக இல்லை.

இதனால் பாண்டியன் என் நம்பிக்கையை உடைத்துவிட்டாய், இனி நாம் பேசிக்கொள்ளவே வேண்டாம். ஒரே வீட்டில் இருப்போம் ஆனால் நமக்கும் இனி ஒரு ஒட்டும் உறவும் இல்லை என கூற கோமதி ஷாக் ஆகிறார்.
தனது கணவர் கூறிய விஷயம் கேட்டு கோமதி ஷாக் ஆக பாண்டியன் தனது முடிவில் உறுதியாக உள்ளார். இனி கதையில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து காண்போம்.