கட்டுக் கட்டாக பணம் வைத்திருந்த செந்தில், மீனா ஷாக், அடுத்து நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்

By Yathrika Jun 22, 2026 11:23 AM GMT
Report

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடைசியாக பரபரப்பான கதைக்களம் என்றால் முத்துவேலை கதிர் தள்ளிவிட்டுவிட்டான் என குமார் பழி போட்ட விஷயம் தான்.

பின் அந்த பிரச்சனை எப்படியோ முத்துவேல் சொன்ன உண்மையால் சுமூகமாக முடிவடைந்தது.

எபிசோட்

இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ஆரம்பத்தில் மயில் தனது அம்மா-அப்பாவிடம் இனி என் பிரச்சனையில் தயவுசெய்து தலையிடாதீர்கள்.

அந்த பெண் வீட்டிற்கு எதற்கு சென்று பேசினீர்கள், அவர் யாருடன் பேசினால் நமக்கு என்ன என கோபமாக கேட்க அவரது அம்மா வழக்கம் போல் கத்துகிறார். அடுத்த பாண்டியனிடம் அனுமதி கேட்டு சரவணன் கதிரை அழைத்துக்கொண்டு அஞ்சலி வீட்டிற்கு செல்கிறார்.

கட்டுக் கட்டாக பணம் வைத்திருந்த செந்தில், மீனா ஷாக், அடுத்து நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் | Pandian Stores 2 Serial June 22 Episode

அங்கு அஞ்சலி மற்றும் அவரது அம்மா-அப்பாவிடம் மன்னிப்பு கேட்கிறார், தன்னால் இனி எந்த பிரச்சனையும் வராது என்கிறார். அவர்களிடம் மிகவும் எமோஷ்னலாக சரவணன் பேச அஞ்சலியும் அழுகிறார்.

கடைசியாக செந்தில்-மீனா காட்சிகள் வருகின்றன. செந்தில் லஞ்ச பணம் வைத்துள்ள பீரோவை துரந்துவிட்டு செல்ல அங்கு எதர்சையாக வந்த மீனா அந்த பணத்தை பார்த்து ஷாக் ஆகிறார். பின் செந்திலிடம் என்ன இது என கேட்க அவர் தான் சேர்த்து வைத்து பணம் என்கிறார்.

கட்டுக் கட்டாக பணம் வைத்திருந்த செந்தில், மீனா ஷாக், அடுத்து நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் | Pandian Stores 2 Serial June 22 Episode

உடனே மீனா, நானும் தான் அரசு வேலை செய்கிறேன், உங்களை விட அதிகமாக சம்பாதிக்கிறேன் என்னிடம் கூட இவ்வளவு இல்லையே என கேட்கிறார். ஆனால் அப்போது செந்தில் ஏதோ கூறிவிட்டு செல்கிறார், மீனா அவர் சொன்னதை நம்பவில்லை.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US