லஞ்சம் வாங்கும் போது வந்த விஜிலென்ஸ் அதிகாரி, சிக்கிய செந்தில்...பாண்டியன் ஸ்டோர் 2 பரபரப்பு எபிசோட்

By Yathrika Jun 25, 2026 07:56 AM GMT
Report

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

குடும்பங்கள் கொண்டாடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் கடந்த சில நாட்களாக எந்த ஒரு பரபரப்பு கதையும் இல்லை.

ஒன்றே ஒன்று இருந்தது, அதாவது செந்தில் லஞ்சம் வாங்கி வீட்டில் வைத்திருந்த பணத்தை மீனா பார்த்து கேள்வி மேல் கேள்வி கேட்டார், ஆனால் எப்படியோ சமாளித்து தப்பித்துவிட்டார்.

பின் தன்னிடம் இருந்த பணத்தை மீனா அப்பாவிடம் கொடுத்துள்ளார். அவர் ஏதாவது வீடு வந்தால் வாங்கி தருகிறேன் என கூறியுள்ளார்.

லஞ்சம் வாங்கும் போது வந்த விஜிலென்ஸ் அதிகாரி, சிக்கிய செந்தில்...பாண்டியன் ஸ்டோர் 2 பரபரப்பு எபிசோட் | Pandian Stores 2 Serial June 25 Episode

எபிசோட்

அரசியை கார்த்திகேயன் ரோட்டில் சந்தித்து பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது குமார் அவர்களை பார்த்து செம கோபப்படுகிறார். இருவரும் சிரித்து பேசிக்கொண்டிருப்பதை கண்ட குமார் பைக்கை நிறுத்திவிட்டு அரசியிடம் சென்று யார் இவன், இவன்கூட நின்னு ஏன் பேசிக்கிட்டு இருக்க என கேட்கிறார்.

அதெல்லாம் உன்னிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, நீ இங்க இருந்து கிளம்பு என அரசி சொல்ல அவரை குமார் அடிக்க பார்க்கிறார், உடனே கார்த்திகேயன் அதனை தடுத்து நிறுத்துகிறார்.

லஞ்சம் வாங்கும் போது வந்த விஜிலென்ஸ் அதிகாரி, சிக்கிய செந்தில்...பாண்டியன் ஸ்டோர் 2 பரபரப்பு எபிசோட் | Pandian Stores 2 Serial June 25 Episode

அடுத்து வந்த கதைக்களம் தான் பயங்கரம், தமிழகத்தில் ஏற்கெனவே லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சில முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்திவரும் நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் கதையிலும் இப்போது அப்படியொரு கதைக்களம் அமைந்துள்ளது.

செந்தில் ஆபிஸில், ஆவணங்கள் இல்லாத போதும் ஒரு பைலில் கையெழுத்து போடுகிறார். அதற்காக செந்திலுக்கு லஞ்ச பணம் வர அதனை உதவியாளர் கொடுக்கிறார். அப்போது டிராவில் இடம் இல்லாததால் அந்த பணத்தை நீயே வச்சிரு நான் பிறகு வாங்கிக்கொள்கிறேன் என்கிறார். எனவே உதவியாளர் பாக்கெட்டில் வைத்துக் கொள்கிறார்.

லஞ்சம் வாங்கும் போது வந்த விஜிலென்ஸ் அதிகாரி, சிக்கிய செந்தில்...பாண்டியன் ஸ்டோர் 2 பரபரப்பு எபிசோட் | Pandian Stores 2 Serial June 25 Episode

அந்த நேரம் விஜிலென்ஸ் அதிகாரிகள் சோதனை செய்ய உதவியாளர் சிக்கிக் கொள்கிறார், யார் பணம் என கேட்டபோது மூத்த அதிகாரி ஒருவரை கைகாட்டி விடுகிறார். இதனால் தப்பித்த செந்தில் மீனா சொன்ன விஷயங்களை நினைத்து பார்க்கிறார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US