செந்தில் லஞ்சம் வாங்கியது தெரிந்ததும் மீனா செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்...
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்ற பழமொழிக்கு ஏற்ப இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஒரு கதைக்களம் தான் ஒளிபரப்பாகி வருகிறது.
மாமனார் சொன்னதால் லஞ்சம் வாங்க துணிந்தார் செந்தில், அதனால் பல லட்சம் பணமும் சம்பாதித்தார். கடந்த சில நாட்களுக்கு முன் ஒளிபரப்பான எபிசோடில், வீட்டில் கட்டுக் கட்டாக செந்தில் பணம் வைத்திருந்ததை பார்த்து மீனா கேள்வி கேட்க ஏதேதோ கூறி சமாளித்தார்.

பின் வீட்டில் இருந்தால் பிரச்சனை என அந்த பணத்தை மீனாவின் அப்பாவிடமே கொடுத்து வைத்திருந்தார். கடைசியாக ஒரு பைல் கையெழுத்து போட்டதற்காக செந்தில் லஞ்சம் வாங்க அப்போது டிராயரில் பணம் இடம் இல்லாததால் அவரையே வைத்திருக்க கூறினார்.
அந்த நேரம் விஜிலென்ஸ் அதிகாரிகள் வர ஜஸ்ட் மிஸ்ஸில் செந்தில் தப்பித்தார்.

எபிசோட்
இன்றைய எபிசோடில், செந்தில் ஆபிஸில் ரைட் வந்த விஷயம் கேள்விப்பட்டு மீனா அவரது அலுவலகத்திற்கு செல்கிறார். அங்கு மீனாவை பார்த்த செந்தில் அவரை வீட்டிற்கு அழைத்து வந்து நடந்த விஷயங்களை கூறுகிறார்.

தனது கணவன் லஞ்சம் வாங்கிய விஷயத்தை அறிந்து மீனா செம ஷாக் ஆகிறார், செந்திலையும் திட்டுகிறார். நீங்கள் செய்தது கஷ்டமாக உள்ளது, நீங்கள் லஞ்சம் எல்லாம் வாங்க மாட்டீர்கள் என்று நம்பி இருந்தேன்.
ஆனால் அப்படி எல்லாம் என்னை நம்பாதே என நீங்கள் புரிய வைத்துவிட்டீர்கள் என கோபமாக வெளியே செல்கிறார். இன்றைய எபிசோடில் இந்த கதைக்களம் தான் பரபரப்பாக இருக்கிறது.