அசிங்கப்படுத்திய அரசி, குமாருக்காக சக்திவேல் செய்யப்போகும் வேலை, அடுத்த பிரச்சனை ரெடி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
ஒருவருக்கு திருமணம் ஆகாதது இவ்வளவு பிரச்சனையா என யோசிக்கும் அளவிற்கு குமாரின் திருமணம் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகம் வருகின்றன.
அரசியை முதலில் பழிவாங்க கடத்தி பின் திருமண நாடகம் நடக்க அதனால் ஏகப்பட்ட பிரச்சனையை சந்தித்தார் குமார். அதன்பின் கொஞ்சம் திருந்தி நல்லவனாக இருந்தவர் அரசி மனதில் இடம் பிடிக்கவும் பார்த்தார்.
ஆனால் முத்துவேலை தள்ளிவிட்டு கதிர் மீது பழியை போட இரண்டு குடும்பத்தினருமே அவரை வெறுக்கிறார்கள். இதற்கு இடையில் அரசியை வெளியில் பார்த்தார் பிரச்சனை செய்தபடி இருந்த குமாரை இன்றைய எபிசோடில் வெளுத்து வாங்குகிறார் பாண்டியன்.

அடுத்த கதைக்களம்
என் மகளை எப்போது பார்த்தாலும் தொந்தரவு செய்துகொண்டு அவ்வளவு தான் உனக்கு என பாண்டியன் மிரட்டி அனுப்புகிறார். அந்த வேதனையில் இருந்த குமாரிடம் அவரது அப்பா வந்து பேசுகிறார்.

ஊரில் உனக்கு பொண்ணே இல்லையா என கேட்க குமார் யாரும் என பெண் தர மாட்றாங்களே என புலம்புகிறார். அந்த நேரம் மயிலின் அப்பா தனது 2வது மகளின் திருமணம் பற்றிய பயம் தான் அதிகமாக உள்ளது என தெரிந்தவரிடம் பேசுகிறார்.
முதல் மகள் வீட்டில் இருக்கும்போது அவளுக்கு திருமணம் நடக்குமா என்ற பயம் எங்களுக்கு அதிகம் உள்ளது என்கிறார்.

அவரின் பேச்சை ஒட்டுக்கேட்ட சக்திவேல் கொஞ்சம் சந்தோஷப்படுகிறார், அநேகமாக தனது மகன் குமாருக்கு மயிலின் தங்கையை திருமணம் செய்துவைக்க சக்திவேல் முடிவு செய்துவிட்டார் என தெரிகிறது.