உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By Yathrika Apr 02, 2026 06:00 AM GMT
Report

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

கதையில், புளி எடுக்க ஸ்டூல் போட்டு மேலே ஏறிய கோமதி மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துவிட்டார். அவர் கீழே விழுந்த போது பாண்டியனை கூப்பிட அவரோ எப்போதும் போன்ற நாடகம் தான் என கடைக்கு சென்றுவிட்டார்.

மயக்கம் அடைந்த கோமதியை சரவணன் மருத்துவமனையில் சேர்க்க மருத்துவர் கோமதி இன்னும் கண் விழிக்கவில்லை என்கிறார், அதைக்கேட்டு பாண்டியன் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் வருத்தம் அடைகிறார்கள். 

உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 | Pandian Stores 2 Serial March 02 Episode

பாண்டியன் மட்டும் அவள் கூப்பிட்ட போது போய் பார்த்திருக்கலாமே என மனம் வருந்துகிறார்.

உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 | Pandian Stores 2 Serial March 02 Episode

எபிசோட்

இன்றைய எபிசோடில், காலையில் எழுந்த பாண்டியன் இந்நேரம் கோமதி இருந்தால் இப்படியெல்லாம் செய்திருப்பாள், வீட்டில் சுற்றிக்கொண்டே இருப்பாள் என நினைத்துப் பார்க்கிறார்.

அந்த நேரத்தில் மருத்துவமனையில் இருந்து கதிர்-மீனா வீட்டிற்கு வர நீங்கள் என் வந்தீர்கள் என்கிறார், செந்தில்-அரசி அங்கு இருக்கிறார்கள் என்றதும் நிம்மதி அடைகிறார். பின் மீனாவிற்கு மருத்துவமனையில் இருந்து போன் வருகிறது, கோமதி குணமாகிவிட்டார் கண் விழித்துவிட்டார் என்கின்றனர்.

உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 | Pandian Stores 2 Serial March 02 Episode

உடனே பாண்டியன் மருத்துவமனை சென்று தனது மனைவியை சந்திக்கிறார், எமோஷ்னல் காட்சிகள் இடம்பெறுகின்றன.

வீட்டிற்கு கோமதி வந்தவுடன் அனைவரும் உட்கார்ந்து பேசுகிறார்கள். காந்திமதி நான் அந்த நேரம் வீட்டில் இருந்திருக்கலாம், அப்போது யாருமே வீட்டில் இல்லையா என கேட்க கோமதி இவர் இருந்தார். நான் அழைத்தும் காதில் கேட்காதவர் போல் சென்றுவிட்டார் என்கிறார்.

உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 | Pandian Stores 2 Serial March 02 Episode

உடனே பாண்டியன் சிரித்தபடி, என்னிடம் பேச நீ என்னென்ன நாடகம் எல்லாம் போட்டாய். மூச்சு முட்டுது, காபி கையில் கொட்டிக்கொண்டேன் என எவ்வளவு நாடகம் போட்டாள், அப்படி இதுவும் ஒன்று என்று நினைத்ததாக கூற மற்றவர்கள் அனைவரும் சிரிக்கிறார்கள்.

ஆனால் கோமதி கோபப்பட ராஜி-மீனா மௌனமாக இருக்கிறார்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US