கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
தமிழ் சின்னத்திரையில் நிறைய ரீமேக் சீரியல்கள், டப்பிங் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
ஆனால் தமிழிலேயே உருவாக்கப்பட்டு பின் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட ஒரு தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். முதல் பாகத்தில் அண்ணன்-தம்பிகளின் பாசத்தை உணர்த்தும் கதைக்களம் அமைந்தது.
முதல் பாகம் முடிந்த வேகத்தில் 2ம் பாகம் தொடங்கப்பட்டது. இந்த கதைக்களம் அப்பா-மகன்கள் பாசம், கூட்டுக் குடும்பம் என பல விஷயங்களை எடுத்துரைக்கும் கதையாக அமைந்து வருகிறது.

எபிசோட்
தற்போதைய எபிசோடில், அரசி-குமார் இருவரின் திருமணத்தை நடத்தி வைக்கும் பிளானில் காந்திமதி கோமதி வீட்டில் தங்கி இருக்கிறார். மீனா, மயில் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கோமதியிடம் கூறி பிரச்சனை தீர்க்க முயற்சி செய்து மயில்-கோமதி கோவிலில் சந்திக்க வைக்க ஏற்பாடு செய்தார்.
அங்கு மயிலின் அம்மா வேலையில்லாததை பேச கோமதி மீனா மீது கோபப்பட்டு அங்கிருந்து சென்றார்.

இன்றைய எபிசோடில், கோமதி மீனாவிற்கு போன் செய்து மயிலுக்காக நீ எதையும் சொய்யாதே. எனக்கு உன்னை மிகவும் பிடிக்கும் கோபப்படுத்தும் விஷயங்களை செய்யாதே கூறி கோவிலுக்கு போகலாமா என்கிறார்.
மீனாவும் ஒகே சொல்ல கோமதி தனது அம்மாவிடம் மட்டும் கோவில் போகும் விஷயத்தை கூறிவிட்டு போனை வீட்டிலேயே வைத்துவிட்டு கோவிலுக்கு செல்கிறார்.
இந்த தருணத்தை பயன்படுத்தி கோமதி-பாண்டியன் சண்டையை முடிக்க காந்திமதி, கோமதி போனை சைலண்டில் போட்டுவிட்டு அவள் எங்கே போனால் என்றே தெரியவில்லை என புலம்புகிறார்.

அரசி, கதிர், ராஜி 3 பேரும் கோமதி எங்கே சென்றார் தெரியவில்லையா என பதறுகிறார்கள். இப்படி சொன்னால் கண்டிப்பாக பாண்டியன் கோமதியை தேடுவார், கோபம் குறையும் சண்டை முடியும் என காந்திமதி ஒரு பிளான் போட்டுள்ளார். அவரது பிளான் சக்சஸ் ஆகுமா அல்லது பிரச்சனை வருமா என்பதை பொறுத்திருந்து காண்போம்.
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri