வீட்டிற்கு வந்த மனைவியை பார்த்து பாண்டியன் சொன்ன வார்த்தை, ஷாக்கான கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
அப்பா-மகன்களின் பாசக் கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. கதையில் உள்ள 5 முக்கிய ஜோடிகளுக்குமே பிரச்சனை தான் ஓடிக் கொண்டிருக்கிறது.
கதிர்-ராஜி திருமண விஷயத்தை மறைத்ததால் பாண்டியன் கோமதி மீது கோபமாகவே உள்ளார், எப்போது அவரது கோபம் குறையும் தெரியவில்லை. கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சரவணனிடம் கூறாமல் தனியாகவே தனது குழந்தையை வளர்த்துக்கொள்ள முடிவு எடுத்துவிட்டார் மயில்.

மீனாவின் அப்பா சொன்னதால் இப்போது லஞ்சம் வாங்கி தொடங்கிவிட்டார் செந்தில், அது எப்போது பெரிய பிரச்சனையாக வெடிக்கப்போகிறது தெரியவில்லை. கதிர்-ராஜி சண்டை இல்லை ஆனால் கியூட்டாக அப்பப்போ சண்டை போட்டுக் கொள்வார்கள்.
அப்பத்தா குமாரு திருமணத்தை நிறுத்தி அரசியுடன் கல்யாணம் செய்து வைக்க பிளான் போடுகிறார், அது என்ன ஆகுமோ பொறுத்திருந்து காண்போம்.

எபிசோட்
இன்றைய எபிசோடில், கோமதியை காணவில்லை என்றதும் வீட்டில் எல்லோருமே பதற்றத்தில் உள்ளனர். செந்தில் மீனாவிற்கு போன் செய்து அம்மாவை காணும் என கூற அவர் முழிக்கிறார். பின் இது பாட்டி வேலையாக இருக்குமோ என கோமதியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வருகிறார்.

கோமதியை கண்டதும் மகன்கள், மகள் துடித்துப்போக பாண்டியன் இதுவும் ஒரு நாடகமா, நீ திருந்தவே மாட்டியா என கோபமாக என்னென்னவோ கூற கோமதி ஷாக் ஆகிறார்.
ஒரு கட்டத்தில் மிகவும் கோபம் அடைந்த கோமதி, ஆமாம் நான் உங்களுக்கு தெரியாமல் திருமணம் செய்தது, அதை மறைத்தது எல்லாமே தவறு தான். இப்போது என்ன அதற்கு என அவரும் சண்டை போடுகிறார்.
