அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்

By Yathrika Mar 18, 2026 04:30 AM GMT
Report

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

பாண்டியன்-கோமதி என்ற ஜோடியின் குடும்ப கதையாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.

இப்போது கதையில் கோமதி தனது அம்மாவிடம் சொல்லிவிட்டு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு மீனாவுடன் சென்றுள்ளார். ஆனால் காந்திமதி தனது மகள் எங்கே சென்றாள் என்றே தெரியவில்லை என வீட்டில் ஒரு நாடகம் போட அது பெரிய பிரச்சனையாக வெடித்துள்ளது.

இப்படி சொன்னால் பாண்டியன் கோமதியை தேடி பதறுவார் என காந்திமதி நினைக்க அது அப்படியே மாறிவிட்டது.

அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் | Pandian Stores 2 Serial March 18 Episode

எபிசோட்

இன்றைய எபிசோடில், கோமதி, கதிர் கல்யாணம் நான் செய்து வைத்தேன் சரி அது ஓரமாக இருக்கட்டும். அரசி, குழலி கல்யாணம் எல்லாம் எப்படி நடந்தது, அவர்களின் திருமண முடிவை நீங்களே தானே எடுத்தீர்கள், என்னிடம் ஏதாவது கேட்டீர்களா.

அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் | Pandian Stores 2 Serial March 18 Episode

நீங்கள் ஏதாவது முடிவு எடுத்தால் அது சரியாக இருக்கும் என்று தானே இருந்தேன். அந்த நம்பிக்கை உங்களுக்கு என் மீது இல்லை தானே, கதிர்-ராஜி திருமணம் ஆகி சண்டை போட்டுக்கொண்டு இருந்தால் பரவாயில்லை, இருவரும் சந்தோஷமாக தானே உள்ளார்கள்.

நான் மீண்டும் மீண்டும் பேச வரவேண்டும் ஆனால் நீங்கள் அப்படியே செல்வீர்கள், அதில் ஒரு சந்தோஷம் என கோபமாக பேசுகிறார். அடுத்து தனது மகன்களிடம் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நான் ஏதாவது செய்து சரி செய்கிறேன் தானே.

அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் | Pandian Stores 2 Serial March 18 Episode

ஒரு மாதமாக இந்த மனுஷன் பின்னால் சுத்துக்கொண்டு இருக்கிறேன் நீங்கள் ஏதாவது செய்தீர்களா, மருமகள்கள் கூட எனக்கு ஆதரவு கொடுக்கிறார்கள் என கோபத்தை கொட்டுகிறார்.

கோமதி பேசியதை கேட்டு செம கோபத்தில் வீட்டைவிட்டு கிளம்பிய பாண்டியன் கடையில் உட்கார்ந்துகொண்டு வீட்டிற்கு வர மாட்டேன் என முடிவு எடுக்கிறார். அந்த நேரம் பழனி கடைக்கு வர நான் உங்களுக்காக பேசுகிறேன் வீட்டிற்கு வாருங்கள் என்கிறார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US