அதிகமாக போன கோமதி-பாண்டியன் சண்டை, இன்றைய எபிசோடில் நடந்த அதிரடி விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
குடும்பங்கள் கொண்டாடும் கதையாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கடந்த சில வாரங்களாகவே மிகவும் பிரச்சனையாகவே சென்று கொண்டிருக்கிறது.
நேற்றைய எபிசோடில் கோமதி, பாண்டியனை கேள்வி மேல் கேள்வி கேட்டு சண்டை போட்டார். கதிர்-ராஜி திருமணம் செய்து வைத்தது தவறு தான், அதற்கு என்ன இப்போது, நீங்கள் சொல்வதை மட்டும் தான் கேட்க வேண்டுமா என்கிறார்.
சரி நீங்கள் குழலிக்கு வரன் பார்த்தீர்களே என்னிடம் கேட்டீர்களா, அரசிக்கு பார்த்தீர்களே என்னிடம் கேட்டீர்களா, நீங்கள் முடிவு செய்து சொன்னீர்கள் நான் ஒப்புக்கொண்டேன். இப்போது உங்களை கேட்காமல் செய்தது தான் பெரிய தவறா என அடுத்தடுத்து நிறைய கேள்விகள் கேட்டார்.
எபிசோட்
இன்றைய எபிசோடில், நான் வீட்டிற்கு வர மாட்டேன் என கூறிய பாண்டியனை எப்படியோ பேசி அவரை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார் பழனி. வீட்டில் தனது அக்காவிடம் மச்சானை பார்த்து எப்படியெல்லாம் நீ கேள்வி கேட்டிருக்க, அவர் இந்த குடும்பத்திற்காக எவ்வளவு உழைத்துள்ளார் என பாண்டியனுக்கு சப்போர்ட் செய்து பேசினார்.

ஆனால் அவரது பேச்சு கடைசியில் காமெடியாக முடிந்தது.
பின் இந்த வார புரொமோவில் பார்த்தது போல் பாண்டியன், செந்தில் மற்றும் கதிரிடம் இன்னும் 2 மாதத்தில் நான் தந்த ரூ. 10 லட்சம் வர வேண்டும் என்கிறார். இதைக்கேட்ட அனைவரும் ஷாக் ஆகி கதிர் நாங்கள் தருகிறோம் என்கிறார்.

கடைசியில் பாண்டியன் கோமதி சமைத்த சாப்பாட்டை இனி சாப்பிட மாட்டேன் என கடையில் வாங்கி வந்து சாப்பிடுகிறார். அரசி மற்றும் சரவணனையும் அழைத்து தான் வாங்கி வந்த சாப்பாட்டை கொடுக்கிறார்.
லண்டனில் பிறந்து 18 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: 3வது மாடியில் இருந்து கீழே வீசிய தாய் News Lankasri
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri