ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிகரமான ஒரு தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.
கதையில் இந்த வாரத்திற்கான புரொமோவில், மனைவியிடம் முறைத்துக்கொண்டே இருந்த பாண்டியன் கோமதி பின்னாலேயே அவரை கெஞ்சியபடி செல்கிறார். கோமதி இத்தனை நாள் ஆட்டம் காட்டிய தனது கணவரை ரோட்டில் புலம்ப வைத்துள்ளார் கோமதி.
ஆனால் புரொமோ எபிசோட் காட்சிகள் இன்னும் இடம்பெறவில்லை.

எபிசோட்
காந்திமதி, அரசி-குமாரை பேச வைக்க இருவரையும் கோவிலுக்கு வர வைக்கிறார். அங்கு காந்திமதி அரசியிடம் தனது பேரன் பற்றி நல்ல விதமாக பேசி அவன் திருந்திவிட்டான் என்கிறார்.

ஆனால் அரசி இவனை எப்படி நம்புவது என திட்டிவிட்டு செல்கிறார். அடுத்து பாண்டியன் வீட்டில் தனது வங்கி புக்கை தேடு தேடு என தேடுகிறார், கடைசியில் எப்படியோ கண்டுபிடித்துவிடுகிறார்.
பின் கோமதி ஏதோ பொருள் எடுக்க நாற்காலி மீது ஏற மயக்கம் வந்து கீழே விழுந்துவிடுகிறார். தனது கணவனை அவர் அழைக்க பாண்டியன் வழக்கம் போல் நாடகம் ஆடுகிறார் என கிளம்பிவிடுகிறார். பின் வீட்டிற்கு வந்த சரவணன் கோமதி நிலை கண்டு பதறிப்போய் தனது மாமா உதவியுடன் மருத்துவமனையில் சேர்க்கிறார்.

செய்தி கேள்விப்பட்டு கதிர், மீனா ஆகியோரும் மருத்துவமனை வந்துவிடுகிறார்கள். கோமதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஷயம் கேள்விப்பட்டதும் பதறிப்போன பாண்டியன் கோமதிக்கு என்ன ஆனது என புலம்புகிறார்.
மருத்துவர் எப்போது மயக்கம் அடைந்தார், வெகு நேரம் ஆனதா, மாத்திரை போட்டாரா என பல கேள்விகள் கேட்கிறார். ஒருவேளை பாண்டியன் கோமதி அழைத்த போதே வந்திருந்தால் மருத்துவமனை வரை வந்திருக்க மாட்டார்கள்.