சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்

By Yathrika Mar 05, 2026 06:50 AM GMT
Report

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

சீரியல்களில் டாப்பில் இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நேற்றைய எபிசோடில், மயில் சரவணனை கோவிலில் சந்தித்து தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கூறுகிறார்.

அதைக்கேட்டதும் சரவணன், நான் முகமே பிடிக்கவில்லை என ஒதுங்கி இருக்கிறேன் பிறகு எப்படி என் குழந்தை உன் வயிற்றில் பிறக்கும், அது யாருடைய குழந்தை என கேட்டார்.

அவரின் வார்த்தைகள் கேட்டு மயில் செம ஷாக் ஆகிறார், அவர் மருத்துவமனை கொடுத்ததை காட்டியும் சரவணன் எதுவும் பார்க்காமல் அது என் குழந்தை இல்லை என கூறிவிட்டு செல்கிறார்.

சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் | Pandian Stores 2 Serial March 5 Episode Storyline

எபிசோட்

இன்றைய எபிசோடில், சரவணன் சொன்னதை கேட்டு ஷாக்கில் மயில் அப்படியே நின்றுகொண்டிருக்கிறார். மீனாவை கோவில் வெளியே பார்த்த சரவணன் நீயும் மயிலுக்கு துணையா, வீட்டில் யாருமே அவளிடம் பேசுவது இல்லை, நீ மட்டும் ஏன் அவளிடம் பேசிக்கொண்டிருக்கிறாய்.

மீனா உன்னை மிகவும் நம்பினேன் நீ இப்படி செய்வாய் என நினைக்கவில்லை என கோபமாக கூறிவிட்டு செல்கிறார்.

சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் | Pandian Stores 2 Serial March 5 Episode Storyline

கோவிலுக்குள் வந்து மீனா, மயிலிடம் பேசுகிறார். அவரோ சொன்ன வார்த்தைகளை கூறி கதறி அழுகிறார், பின் ஒருமாதிரி இருக்கு தன்னை வீட்டிற்கு அழைத்துச்செல்ல கூறுகிறார்.

வீட்டிற்கு சென்ற மயில்-மீனா, அவரது அம்மா-அப்பாவிடம் எதுவும் கூறவில்லை. 

சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் | Pandian Stores 2 Serial March 5 Episode Storyline

பின் அறைக்கு சென்ற மயில் இனி சரவணனை தொந்தரவு செய்யப்போவதில்லை. நான் அந்த குடும்பத்தை பொறுத்த வரையில் யாரோ ஒருவர், அப்படியே இருக்கட்டும். இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம், நீயும் வீட்டில் யாரிடமும் கூற வேண்டாம்.

நான் தனி ஆளாகவே என் குழந்தையை வளர்த்துக் கொள்கிறேன் என மயில் முடிவு எடுக்க அதைக்கேட்டு மீனா ஷாக் ஆகிறார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US