இரவில் சரவணன் செய்த செயலை கண்டதும் கதறி கதறி அழும் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட்

By Yathrika Mar 06, 2026 11:02 AM GMT
Report

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

ஒரு பெண் கர்ப்பமானால் என்பதை அவளது கணவனிடம் கூறி இருவரும் சந்தோஷப்படும் அழகே அழகு. பல சீரியல்களில் அந்த குறிப்பிட்ட காட்சியை அழகாக கொண்டு செல்வார்கள், சில சீரியல்களில் அதை மோசமாக காட்டுவார்கள்.

அப்படி தான் இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடந்து கொண்டிருக்கிறது. மயில் நிஜமாகவே கர்ப்பமாகி மருத்துவ பரிசோதனை ஆதாரத்துடன் சரவணனிடம் சந்தோஷமாக கூறினார்.

இரவில் சரவணன் செய்த செயலை கண்டதும் கதறி கதறி அழும் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் | Pandian Stores 2 Serial March 6 Episode Story

ஆனால் அவரோ ஏற்கெனவே செய்தது போல் மீண்டும் செய்கிறாயா, இது யாருடைய குழந்தை என கோபமாக கேட்டுவிட்டு சென்றுவிடுகிறார். அதே சோகத்துடன் வீட்டிற்கு வந்த மயில் இனி சரவணனை தேடி போக மாட்டேன், அந்த குடும்பத்தை பார்க்க மாட்டேன்.

தனியாக நான் என் குழந்தையை பார்த்துக்கொள்கிறேன் என தைரியமாக மீனாவிடம் பேசுகிறார்.

இரவில் சரவணன் செய்த செயலை கண்டதும் கதறி கதறி அழும் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் | Pandian Stores 2 Serial March 6 Episode Story

எபிசோட்

இன்றைய எபிசோடில், மயில் அம்மா என்ன நடந்தது மாப்பிள்ளையிடம் கூறினாயா, யார் வந்து உன்னை அழைத்துக்கொண்டு செல்கிறார்கள் என கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.

அதற்கு மயில், இனி நீ என் வாழ்க்கையில் தலையிட வேண்டாம், நான் அம்மா ஆகப்போகும் விஷயத்தை என் புருஷனிடமோ, அவர் வீட்டிலோ யாரிடமும் கூறவில்லை. நானே என் பிள்ளையை தனியாக வளர்ப்பேன், நான் முடிவு எடுத்துவிட்டேன், இனி அதன்படி தான் இருக்கப்போகிறேன் என அம்மாவிடம் கோபமாக பேசுகிறார்.

இரவில் சரவணன் செய்த செயலை கண்டதும் கதறி கதறி அழும் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் | Pandian Stores 2 Serial March 6 Episode Story

ஆனால் மயிலின் அம்மாவிற்கு ஏதோ நடந்திருக்கிறது என சந்தேகமாக மீனாவை சந்தித்து என்ன ஆனது என கேட்க, அவரும் சரவணன் சொன்ன விஷயத்தை கூறிவிடுகிறார். மயில் அக்கா முடிவை தாண்டி நீங்கள் எதுவும் செய்யாதீர்கள், கொஞ்சம் அமைதியாக இருங்கள் என மீனா மயில் அம்மாவிடம் கெஞ்சுகிறார்.

இரவில் சரவணன் செய்த செயலை கண்டதும் கதறி கதறி அழும் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் | Pandian Stores 2 Serial March 6 Episode Story

இன்னொரு பக்கம், மயிலை சந்தித்தது குறித்து அவரிடம் சொன்ன விஷயத்தையும் தனது தோழியிடம் கூறி புலம்புகிறார் சரவணன். அந்த நேரத்தில் மயில் அவர்கள் இருவரையும் கடையில் ஒன்றாக சேர்த்து பார்க்க கதறி கதறி அழுகிறார். இருவரும் ஒன்றாக பைக்கில் ஏறி செல்கிறார்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US