முத்துவேலை தள்ளிவிட்ட குமார், கைது செய்யப்பட்ட கதிர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் குடும்பங்கள் கொண்டாடும் தொடராக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் உள்ளது.
இப்போது கதையில் முத்துவேல் புற்றுநோயால் பாதிக்கப்பட அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவை வீட்டில் சொல்லாமல் கதிர் உதவியுடன் சிகிச்சை பெற்றுக்கொண்டார். சிகிச்சைக்கு சென்றபோது கதிருக்கும் முத்துவேலுக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது.
இதனால் வீட்டிற்கு வந்தும் முத்துவேல் கதிரை தனியாக சந்தித்து பேசிக்கொண்டு வந்தார்.

எபிசோட்
இந்த வார பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோடின் புரொமோவில், மயிலுக்கு கோமதி பணம் தந்ததும், அதனை உடனே அவர் திருப்பி கொடுத்த காட்சிகள் தான் கதைக்களமாக அமைந்தது.

இன்றைய எபிசோடில் ஒரு பெரிய பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. அதாவது கதிர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் முத்துவேல் நெருக்கமாக பேசிக்கொண்டிருப்பது சக்திவேல் மற்றும் குமாருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
எப்போது பார்த்தாலும் அவர்களுடனே முத்துவேல் பேசுவதை தவனித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
முத்துவேல் கதிருடன் காரில் சென்றதை பார்த்த குமாரு அவர்களை பின்தொடர்ந்தார்.

பின் அவர்கள் பேசிக்கொண்டிருந்த போது குமார் சென்று கதிரை தாக்க முயற்சி செய்தார், அப்போது முத்துவேல் தடுக்க குமார் அவரை தள்ளிவிடுகிறார்.
அதில் முத்துவேல் கீழே விழுந்து தலையில் அடிபட்டு மயங்கிவிடுகிறார். அந்த இடத்தில் இருந்து குமார் தப்பியோடி வீட்டில் கதிர் சித்தப்பாவை தள்ளிவிட்டுவிட்டான் என்கிறார்.
இதனால் சக்திவேல் கதிர் மீது புகார் கொடுக்க போலீசார் அவரை கைது செய்கிறார்கள். இதோ அந்த பரபரப்பான புரொமோ,