மருத்துவமனையில் கதிரை அடிஅடியென வெளுத்த சக்திவேல், சிக்கிய சரவணன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் என்பவரின் குடும்ப கதையாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.
இப்போது கதையில் கதிர், முத்துவேலை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு குடும்பத்தினருக்கு இந்த தகவலை கூறுகிறார். பழனிவேலுக்கு விஷயம் தெரியவர முத்துவேல் குடும்பம் மருத்துவமனை செல்கிறார்கள்.

குமார் தன்னால் தான் முத்துவேல் அடிப்பட்டார் என்பதை மறைத்து கதிர் சித்தப்பாவை தள்ளிவிட்டுவிட்டான் என கூற சக்திவேல் கொதித்தெழுகிறார்.
கதிர் மீது செம கோபத்தை காட்டுகிறார்.

இன்றைய எபிசோடில், முத்துவேல் குடும்பம் மருத்துவமனை வர சக்திவேல் கதிரை பார்த்ததும் என் அண்ணனை என்ன செய்தாய் என அடிஅடியென அடிக்கிறார். மருத்துவமனையில் பரபரப்பான சூழல் நடக்க கோவிலில் ஒரு விஷயம் நடக்கிறது.
அதாவது, கோவிலுக்கு சென்ற கோமதி அங்கு ஒருவரை கண்டு செம ஷாக் ஆகிறார்.

அதாவது சரவணன் கோவிலில் அஞ்சலியிடம் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து செம ஷாக் ஆகிறார், அவரிடம் பேச செல்கிறார் அந்த நேரத்தில் ராஜி போன் செய்து முத்துவேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஷயத்தை கூறுகிறார்.