பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அடுத்து வரப்போகும் கதை என்ன தெரியுமா?... வைரலாகும் போட்டோ

By Yathrika Jul 13, 2026 03:30 AM GMT
Report

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் நல்ல குடும்ப கதைக்களத்துடன் முதல் பாக வெற்றியை தொடர்ந்து 2ம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. 

இப்போது சீரியலின் கதையில் செந்தில் லஞ்சம் வாங்கிய விஷயம் முதலில் மீனாவிற்கு தெரியவர இப்போது பெரிய பிரச்சனையில் குடும்பத்திற்கே தெரிந்துவிட்டது. மகன் லஞ்சம் வாங்கியுள்ளான் என்பது தெரிந்ததும் செம கோபத்தில் பாண்டியன் செந்திலை வெளு வெளுஎன வெளுத்துவிட்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அடுத்து வரப்போகும் கதை என்ன தெரியுமா?... வைரலாகும் போட்டோ | Pandian Stores 2 Serial Next Storyline Photo Viral

இதுவரை லஞ்சம் வாங்கிய பணத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்துவிட்டு வீட்டுக்கு வா இல்லை என்றால் இங்கே வராதே என்கிறார். இதனால் செந்திலும் தான் லஞ்சம் வாங்கிய பணத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்கிறார்.

இதற்கு இடையில், குமார்-சுடர் நிச்சயதார்த்ததும் வேகமாக நடக்க, திருமண தேதியும் குறிக்கிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அடுத்து வரப்போகும் கதை என்ன தெரியுமா?... வைரலாகும் போட்டோ | Pandian Stores 2 Serial Next Storyline Photo Viral

அடுத்த கதை

பெரிய பிரச்சனை ஆகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட செந்தில் லஞ்சம் வாங்கிய விஷயம் வீட்டில் தெரிந்ததோடு இப்போது பிரச்சனை முடிந்தது.

அடுத்து என்ன ஆகும் என சீரியல் ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் நேரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. 

அதில் குமார் மாப்பிள்ளையாக வேட்டி சட்டையில் இருக்க சுடர் கழுத்தில் தாலியுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த போட்டோ,

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US