வெளியில் சாப்பிட நீ எதுக்கு இருக்க, மீனாவிடம் செந்தில் கேட்ட கேள்வி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குடும்பங்கள் கொண்டாடும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.
கூட்டுக் குடும்பம், ஒரு கணவன்-மனைவி, 2 மகள், 3 மகன்கள் என அழகான ஒரு குடும்பத்தின் கதை. கடந்த எபிசோடுகளில் கதையில் கோலாகலமாக தீபாவளி கொண்டாட்ட காட்சிகள் இடம்பெற்றது, உடனே பிரச்சனை ஆரம்பித்துவிட்டது.
நேற்றைய எபிசோடில், சரவணன் மயிலிடம் ஆதார் கார்ட் கேட்டு சண்டை போட்டார், பாண்டியன் மனைவியை அழ வைக்காதே என தனது மகனை கண்டித்தார்.

இன்றைய எபிசோட்
இன்று ஒளிபரப்பான எபிசோடில், காந்திமதி, பாண்டியன் மற்றும் தனது மகள் கோமதியை நேரில் சந்தித்து பழனிவேலுவுக்கு அவனது அண்ணன்கள் புதிய மளிகை கடை வைத்துக் கொடுக்கவுள்ளனர்.

நீங்கள் எதுவும் மனதில் வைத்துக் கொள்ளாமல் அவனை வாழ்த்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறார். முதலில் செய்தியை கேட்ட இருவரும் அதிர்ச்சியடைய பின் பழனிவேலை பார்த்து புதிய கடைக்காக கோமதி மற்றும் பாண்டியன் வாழ்த்துகிறார்கள்.
தீபாவளி கொண்டாட்டம் முடிந்து வீட்டிற்கு வந்த மீனா கையோடு செந்திலுக்கு காலை உணவையும் மாமியார் வீட்டில் இருந்து எடுத்து வருகிறார். மதிய உணவு என்று செந்தில் கேட்க மீனா வெளியில் சாப்பிடுங்கள் என்கிறார்.

உடனே செந்தில் எப்போதும் வெளியில் சாப்பிடுவதற்கு நீ எதுக்கு இருக்க என கேட்க, மீனா நான் திருமணம் செய்து தனியாக சென்றால் சமைத்து கொடுப்பேன் என வாக்கு கொடுத்தேனா என கேட்க இல்லை என்கிறார் செந்தில்.
ஆனால் நீங்கள் எனக்கு ஒரு குடும்பம் கிடைக்கும் என வாக்கு கொடுத்தீர்கள் அது நடக்கவில்லை என கோபமாக கூறுகிறார்.