மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ், பல வருடங்களாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள ஒரு தொடராக உள்ளது.
முதல் பாகம் அண்ணன்-தம்பிகளின் பாசம் என்றால் 2ம் பாகம் அப்பா-மகன்களின் பாசத்தை உணர்த்தும் தொடராக அமைந்துள்ளது.
கடந்த சில எபிசோடுகளில் மயில் அப்பா கடையில் திருடிய 1100 பிரச்சனையில் பழனிவேலை பாண்டியன் சந்தேகப்பட்டார். அவர் மிகவும் மனமுடைந்துவிட்டார், இன்னொரு பக்கம் சரவணன் மயிலை சரமாரியாக திட்டிதீர்த்தார்.

செந்தில் தனியாக செல்லலாம் எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என கூறிவிட்டு இப்போது எல்லா வேலையையும் மீனாவை செய்ய வைக்கிறார்.
இதனால் கோபத்தில் மீனா பாண்டியன் வீடு சென்றுவிடுகிறார்.

எபிசோட்
இன்றைய எபிசோடில், மீனாவின் அம்மா அப்பா தீபாவளி சீர் கொடுக்க பாண்டியன் வீட்டிற்கு வருகிறார்கள். அங்கே வந்த செந்தில், ஏன் உன் அம்மா, அப்பாவை இங்கே வர வைத்தாய், நமது வீட்டிற்கு வர சொல்லலாம் அல்லவா என கோபப்படுகிறார்.

கடைசியாக மீனா அவரது அப்பாவிடம் எதிர்த்து பேச அதைப்பார்த்த செந்தில் ஏன் இப்படி பேசுகிறாய் என கேட்க, உங்கள் அம்மா, அப்பாவிடம் ஒழுங்காக பேசுங்கள் என்றால் நீங்கள் கேட்பீர்கள், அதேபோல் எனக்கும் என்ன செய்ய வேண்டும் என்கிறார்.
கோபத்தில் செந்தில் எல்லாம் சரி, ஆனால் தீபாவளி நாம் நம் வீட்டில் தான் கொண்டாடுகிறோம், கொண்டாட வேண்டும் என அழுத்தமாக கூறிவிட்டு செல்கிறார். அடுத்த காட்சியில் கடைசியில் மயில் மற்றும் அவரது அப்பா முன்பு பழனிவேலை பாண்டியன் மோசமாக திட்டுகிறார்.

இதனால் மனமுடைந்த பழனி கதிர் அலுவலகம் வந்து தனது மனகுமுறலை கொட்டுகிறார். எபிசோட் கடைசியில், மயில் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அவரது அப்பா கடையில் இருந்து ரூ. 10,000 எடுத்து செல்கிறார்.
இதனால் மயில் என்ன பிரச்சனை வருமோ என தவிக்கிறார்.

கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri