மீனாவிற்கு இடிமேல் இடி விழும் விஷயங்களாக கூறிய செந்தில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
கூட்டுக் குடும்பம், அது எவ்வளவு அழகு, அப்படி ஒரு குடும்பத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை அழகாக காட்டுகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்.
ஒரு நல்லது இருந்தால் சில கெட்டதும் இருக்கத்தானே செய்யும் அப்படி தான் தொடரில் சில பிரச்சனைகளும் ஏற்படுகிறது. தனது அப்பாவை பற்றி புரிந்துகொள்ளாத செந்தில் பணம் சம்பாதிக்க ஆரம்பித்ததும் அப்படியே ஆளே மாறிவிடுகிறார்கள்.
இப்போது மீனாவிற்கு சந்தோஷம் இல்லை என்றாலும் தனி வீடு போயே ஆக வேண்டும் என தனியாகவும் வந்துவிட்டார் செந்தில்.
எபிசோட்
முதல்நாள் எல்லோரும் கிளம்பியதும் வீட்டைவிட்டு வெளியேறியவர் இரவு நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை, மீனா போன் செய்தாலும் சரியான பதில் இல்லை.
இன்றைய எபிசோடில் செந்தில் வீட்டிற்கு வர அவர் குடித்திருப்பது மீனாவிற்கு தெரிய வருகிறது. பாண்டியன் தொல்லையில் இருந்து வெளியே வந்துள்ளதால் சந்தோஷத்தில் குடித்தேன் என்கிறார்.
காலையில் சாப்பாடு போட பணம் இல்லை இப்போது எங்கே வந்தது என மீனா கேட்க எனது நண்பர்கள் கொடுத்தார்கள் என்கிறார். பின் வீட்டிற்கு Furniture எல்லாம் வருகிறது என செந்தில் கூற அதற்கு மீனா ஷாக் ஆகி பணம் எங்கிருந்து வந்தது என சண்டை போடுகிறார்.
உடனே செந்தில் பணம் வந்தது, சும்மா எல்லாவற்றிற்கும் கேள்வி கேட்காத என படுத்துவிடுகிறார். செந்திலின் இந்த செயல்களை பார்த்து மீனா மிகவும் கஷ்டப்படுகிறார்.
You May Like This Video