இரவோடு இரவாக குழந்தையை வைத்து சரவணன் செய்த காரியம், கடும் அதிர்ச்சியில் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
ஒரு அப்பா-அம்மா, அவர்களுக்கு 3 மகன்கள், 2 மகள்கள் ஆகியோரின் அழகிய குடும்ப கதையாக ஒளிபரப்பாகி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்.
இப்போது கதையில் சரவணன்-மயிலின் பிரச்சனை தான் செல்கிறது. மயில் ஏகப்பட்ட பிரச்சனைக்கு பிறகு எப்படியோ சரவணன் உடன் இருக்க குழந்தையை பெற்றார். சரவணன்-மயில்-குழந்தை அனைவரையும் வீட்டிற்கு அழைத்துவந்த பாண்டியன் குடும்பம் அடுத்து குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சியை நடத்தினர்.

குழந்தைக்கு மயில் கோமதி பாண்டியன் என பெயர் வைத்தார், அதை அனைவருமே கொண்டாடினார்கள். ஆனால் ஆண் குழந்தைக்கு இந்த பெயரா என சமூக வலைதளங்களில் சிலர் விமர்சனம் எழுப்பினர்.
எபிசோட்
இன்றைய எபிசோடில், சரவணன், தனது பெற்றோர் கண்டிப்பாக மயிலுடன் வாழ கூறிவிடுவார்கள் என்ற பயத்திலேயே இருக்கிறார்.

இது பத்தாது என்று செந்தில் சரவணனை குழப்பிய வண்ணம் உள்ளார். இதனால் சரவணன் எல்லோரும் தூங்கிய பிறகு குழந்தையை எடுத்துக்கொண்டு இரவோடு இரவாக வீட்டைவிட்டு கிளம்புகிறார்.

மயில் திடீரென குழந்தையை காணவில்லை என எல்லோரிடமும் கூற அனைவருமே பதறுகிறார்கள், CCTV கேமரா செக் செய்தபோது சரவணன் குழந்தையை தூக்கிக்கொண்டு செல்வது தெரிகிறது. சரவணன் தனது வீட்டிற்கு வந்திருப்பதை அறிந்த அஞ்சலி அவரை இங்கிருந்து போ என எவ்வளவோ கூறியும் போக மறுக்கிறார்.
இதனால் அஞ்சலி பாண்டியனுக்கு போன் செய்து விஷயத்தை கூற அவர்கள் சரவணனை அழைத்து வர அஞ்சலி வீட்டிற்கு வருகிறார்கள்.