கடையில் யாருக்கும் தெரியாமல் பணத்தை எடுத்த மயில் அப்பா, கோபத்தில் சரவணன் செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
கூட்டுக் குடும்பம் என்றால் என்ன தெரியுமா, இதோ நாங்கள் காட்டுகிறோம் என பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஒளிபரப்பாகிறது.
சீரியலின் 2ம் பாகம் அப்பா-மகன்கள் கதைக்களத்துடன் ஒளிபரப்பாகிறது. கதையில் கடைசியாக காந்திமதியின் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம் நடக்கிறது.
முத்துவேல்-சக்திவேல் தங்களது அம்மா பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கெத்து காட்ட நினைக்க கடைசியில் அசிங்கப்பட்டார்கள்.

கோமதி குடும்பத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு காந்திமதி மறக்கவே முடியாத பரிசுகளை கொடுத்து சந்தோஷப்படுத்தினார்கள்.
பின் அசைவ விருந்து போட ஏற்பாடு செய்ய சக்திவேல் ஏமாந்து போக கடைசியில் பாண்டியன் சைவ விருந்தை அனைவரும் சாப்பிட்டுவிட்டு சென்றார்கள்.

எபிசோட்
இன்றைய எபிசோடில், வீட்டிற்கு வந்த சக்திவேல்-முத்துவேல் கோவிலில் நடந்த விஷயங்களுக்காக கோபப்படுகிறார்கள்.

கோமதி, கதிர் கொடுத்த பரிசுகள் குறித்து பெருமையாக பேசுகிறார், உடனே அங்கு வந்த செந்தில் மீனாவை கிளம்பலாம் என கூற கோமதி, ராஜி கஷ்டப்படுகிறார்கள்.
கடைசியில், கடையில் கல்லா பெட்டியில் உட்கார்ந்திருந்த மயிலின் அப்பா அதில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு டீ சாப்பிடுவதாக கிளம்பிவிடுகிறார்.

அவர் பணம் எடுத்ததை பார்த்த சரவணன் மயிலிடம் சண்டை போட அந்த நேரத்தில் பாண்டியன் வருகிறார். உடனே சரவணன் டெலிவரி உள்ளது என கிளம்புகிறார், அவர் மயிலின் அப்பாவை பார்த்து பணம் குறித்து விசாரிப்பார் என தெரிகிறது.
அடுத்து என்ன நடக்கும் என்பதை நாளைய எபிசோடில் காண்போம்.