சினிமாவில் நாயகியாக நடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை ஷாலினி... ஹீரோ இவர்தானாம்...
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இப்போது சொத்து பிரச்சனை சென்று கொண்டிருக்கிறது.
முத்துவேல் தங்களது சொத்தை பிரிக்க முடிவு செய்து அந்த விஷயத்தை வீட்டில் இருப்பவர்களிடம் கூறினார். தனக்கு பாதியும், சக்திவேலுக்கும், பழனிக்கும் என மூன்றாக பிரிக்கிறேன் என்றார்.

மேலும் இந்த வீடு அம்மா இருக்கும் வரை அவருக்கு, அவருக்கு பிறகு இந்த வீடு பழனிக்கு என கூற அது சக்திவேலுக்கு பிடிக்கவில்லை. தங்களது சொத்தை இரண்டாக மட்டுமே பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.
இதனால் நேற்றைய எபிசோடில், பழனியை மிகவும் மோசமாக பேசி அவர் வீட்டைவிட்டு வெளியேறும் படி செய்துவிட்டார். இதனால் பழனி முன்பை போல தனது அக்கா வீட்டிற்கே சென்றுள்ளார்.

புதிய படம்
இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ராஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை ஷாலினி. நடனமும் அட்டகாசமாக ஆடக்கூடிய இவர் புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளாராம்.

இந்த சீரியல் மூலம் பிரபலமான ஷாலினி நடிகர் கவின் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம். மற்றபடி படம் குறித்து வேறு எந்த தகவலும் தெரியவில்லை.