கடைக்கு வந்த முதல் நாளே பணத்தை திருடிய மயில் அப்பா, கோபத்தில் சரவணன்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, விஜய் தொலைக்காட்சியில் குடும்பங்கள் கொண்டாடும் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது.
சமீபத்தில் கதையில் கதிர், பாண்டியன் பெயரில் ஒரு டிராவல்ஸ் திறந்தார். அந்த காட்சிகள் தான் இந்த வார தொடக்கத்தில் காட்டப்பட்டது.
பின் மீனா-செந்தில் தனி வீடு செல்லும் சண்டை ஒரு பிரச்சனையாக ஓடியது.
இன்றைய எபிசோட்
இன்றைய எபிசோடில் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் கதிர்-ராஜியின் கியூட்டான காட்சிகள் இடம்பெற்றன.
அடுத்து அரசி காலேஜ் செல்லும் வழியில் குமார் வந்து பேச அதை கதிர் பார்த்துவிடுகிறார். அவர் கோபப்பட்டு குமாரிடம் சண்டைக்கு போக பின் அரசி விலகிவிடுகிறார்.
மயிலின் அப்பா பாண்டியன் கடைக்கு வேலைக்கு செல்ல முதல் நாளே பிரச்சனைகள் தொடங்குகிறது, சரவணன் செம கோபப்படுகிறார். இன்றைய எபிசோட் கடைசியில் மயில் அப்பா கடையில் இருந்து பணத்தை எடுத்துவிடுகிறார்.
ஒரு ரூபாயை கூட விடாமல் கணக்கு பார்க்கும் பாண்டியனுக்கு இது தெரிந்தால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து காண்போம்.