பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ.. கோவிலில் என்ன நடந்திருக்கு பாருங்க
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் சமீப காலமாக பரபரப்பாக ஓடத் தொடங்கி இருக்கிறது. மயில் பிரச்சனை தான் இதற்கு காரணம்.
தற்போது மயில் கர்ப்பமாக இருப்பது தெரியவந்திருக்கும் நிலையில், அது என்னுடைய குழந்தை இல்லை என சரவணன் சொல்லிவிடுகிறார். இதனால் கதை இன்னும் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது.
மறுபுறம் வில்லன் சக்திவேல் மகன் குமாரவேல் திருமணத்தை நிறுத்தியதற்காக அப்பத்தாவை வீட்டை விட்டே துரத்திவிட்டார்.

ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ
இந்நிலையில் குமாரவேல் ஆக நடித்து வரும் நடிகர் சக்தி இன்ஸ்டாவில் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் கோவிலில் குமரவேல் உடன் அரசி மற்றும் அப்பத்தா ஆகியோர் இருக்கின்றனர். இதனால் விரைவில் குமார் மற்றும் அரசி இருவரும் ஒன்று சேர்வது போல தான் கதை நகரும் என தெரிகிறது.
காட்டுத்தீயின் நடுவே கேட்ட வெடிச்சத்தம்: பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகள் News Lankasri
மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளித்த 2026–27 பட்ஜெட் - புதிய நலத்திட்டங்கள் என்னென்ன? IBC Tamilnadu