பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர், நடிகைகள் வாங்கும் சம்பளம்.. ஒரு நாளைக்கு எவ்வளவு தெரியுமா
சின்னத்திரையின் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.
விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடந்த கயலின் காதுகுத்து விழா நல்ல படியாக முடிந்தது.
இதனை தொடர்ந்து அடுத்தடுத்து என்னவெல்லாம் நடிக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் சுஜிதா, ஸ்டாலின் உள்ளிட்ட முன்னணி கதாபாத்திரங்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு நடிகை சுஜிதா - ரூ. 17,000 வாங்கி வருகிறாராம். அதே போல், நடிகர் ஸ்டாலின் ரூ. 12,000 வாங்கி வருகிறார் என்று தெரிவிக்கின்றனர்.
மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஹேமா - ரூ. 8,000மும், இவருடைய கணவராக ஜீவா கதாபாத்திரத்தில் நடிக்கும் வெங்கட் - ரூ. 10,000 வாங்கி வருகிறார்களாம்.
கதிர் கதாபாத்திரத்தில் நடிக்கும் குமரன் - ரூ. 10,000மும், முல்லையாக நடிக்கும் காவ்யா - ரூ. 10,000மும் வாங்கி வருகிறார்களாம்.
மேலும், கடைசி தம்பியாக கண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சரவணன் - ரூ. 6,000 வாங்கி வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.