பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் எடுத்த அதிர்ச்சி முடிவு! அடுத்த வார ப்ரோமோ
கர்ப்பம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்போது முல்லை மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கர்ப்பமாக இருக்கும் நிலையில் தற்போது மூத்த அண்ணி தனம் கர்ப்பமாகி இருக்கிறார். அவர் வாந்தி எடுத்த நிலையில் ஹாஸ்பிடலுக்கு செல்ல அவர் கர்பமாக இருப்பதாக கூறுகின்றனர்.
அதை கேட்டு அவர் மகிழ்ச்சி ஆகின்றனர். அதே நேரத்தில் அவர் ஒரு விஷயத்திற்காக சோகமும் அடைகிறார். இந்த விஷயத்தை எப்படி வீட்டில் சென்று சொல்வது என யோசிக்கிறார்.
மறைக்க முடிவு
தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை மூர்த்தியிடம் மட்டும் சொல்லும் அவர் வீட்டுக்கு சென்று மற்றவர்களிடம் சொல்லாமல் மறைகிறார்.
ஏற்கனவே இரண்டு பேர் கர்ப்பமாக இருக்கின்றனர். அதனால் தனது கர்ப்பத்தை மூடி மறைக்க முடிவெடுத்துவிட்டார் தனம். வரும் நாட்களில் அந்த கர்பத்தை அவர் கலைக்க முடிவெடுப்பது போல காட்சிகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. யார் தெரியுமா