பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த கடும் சோகமான செய்தி- என்ன இப்படி ஆனது?
அண்ணன்-தம்பிகள் என்றால் இவர்களை போல தான் இருக்க வேண்டும் என ஆசைப்படுவர் அதிகம். அந்த அளவிற்கு மிகவும் ஒற்றுமையாக அண்ணன் சொல்வதை கேட்டு நடக்கும் தம்பிகளாக உள்ளார்கள்.
இப்போது கதையின் டிராக்கில் 4 அண்ணன்-தம்பிகளும் ஒன்றாக இருக்கிறார்கள், அடுத்து என்ன டுவிஸ்ட் என்று யோசிப்பதற்குள் கதையில் நடக்கப்போகும் விஷயம் குறித்து ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர்.
இந்த தொடரில் தமிழக மக்களால் அதிகம் கொண்டாடப்படும் ஜோடி கதிர்-முல்லை. இவர்களுக்கு குழந்தை இல்லாத விஷயம் பற்றி நிறைய ஓடிக் கொண்டிருக்கிறது. ரசிகர்களும் இவர்களுக்கு ஏதாவது சோகமாக காட்டிவிடுவார்களோ என்று யோசிக்கிறார்கள்.
ரசிகர்கள் பயந்தது போல் தான் தொடரில் இன்று காட்டப்பட இருக்கிறதாம்.
இன்றைய எபிசோடில் மருத்துவர் கதிரை அழைத்து இயற்கையாக உங்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு சுத்தமாக இல்லை என்று கூறிகிறாராம். இதனால் எமோஷ்னல் ஆன கதில் உண்மையை முல்லையிடம் மறைக்கிறாராம், அதோடு இன்றைய எபிசோட் முடிகிறதாம்.
வரும் நாட்களில் அவர்களை மிகவும் எமோஷ்னலாக காட்டுவார்கள் என தெரிகிறது.
இதனால் ரசிகர்கள் எங்களது பேவரெட் ஜோடியை அழ வைக்காதீர்கள், கதையை மாற்றுங்கள் என்று புலம்பி வருகிறார்கள்.