முகப்பரு பிரச்சனை, கடன் தொல்லை பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் நடிகையின் சோக நிலை- இப்போது என்ன ஆனார்?
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விஜய்யில் மிகவும் ஹிட்டாக ஓடும் ஒரு தொடர்.
அண்ணன்-தம்பிகள் என கூட்டு குடும்பத்தின் பாசத்தை உணர்த்தும் இந்த சீரியலில் இப்போது சந்தோஷமான டிராக் ஓடுகிறது. புதிய கடை திறந்த சந்தோஷத்தில் இருக்க வீட்டில் இருவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடக்கிறது.
இதில் ஐஸ்வர்யா என்ற வேடத்தில் நடித்த நடிகைகளில் ஒருவர் தீபிகா, இவரது முகத்தில் நிறைய முகப்பருக்கள் இருப்பதால் தொடரில் இருந்து விலகினார்.
அண்மையில் இவர் ஒரு பேட்டியில், முகப்பரு இருப்பதால் சீரியலில் இருந்து விலகியபோது மிகவும் கஷ்டப்பட்டேன். அம்மா-அப்பா தூரமாக இருந்தார்கள், எனக்கு என்று சில கடமைகள் இருந்தது.
அப்போது பண கஷ்டத்தால் மிகவும் வருந்தினேன். அப்போது எனக்கு துணையாக இருந்தது கண்ணன் என்கிற சரவணன் தான். யூடியூப், இன்ஸ்டா பக்கங்களில் அவர் என்னுடன் இணைந்து வீடியோக்கள் செய்வது போன்ற விஷயங்கள் செய்ய அதில் வரும் பணத்தில் நான் இப்போது சமாளித்து வருகிறேன் என கூறியுள்ளார்.