நாயகியாக களமிறங்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புகழ் ஹேமா... என்ன படம் பாருங்க
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு தொடராக உள்ளது.
முதல் பாகம், 2ம் பாகம் என இந்த இரண்டிலும் நடிக்கும் நடிகர்கள் சிலர் உள்ளனர், அதில் ஒருவர் தான் ஹேமா.
மீனா கதாபாத்திரத்தில் முதல் பாகத்தில் கொஞ்சம் டெர்ரராக இருந்தவர் 2ம் பாகத்தில் மிகவும் சாப்ட்டான நபராக கூட்டுக் குடும்பத்தை நேசிக்கும் பெண்ணாக நடித்து வருகிறார். 2ம் பாகத்தில் மீனாவாக நடித்து மக்கள் மனதை மிகவும் கவர்ந்துவிட்டார்.

புதிய படம்
சீரியலில் நடித்து அசத்தி வந்தவர் இப்போது படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ஆணவக் கொலையை மையமாக வைத்து உருவாகும் படத்துக்கு நெல்லை பாய்ஸ் என்று தலைப்பு வைத்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி, எடிட்டிங் பணிகளை செய்துள்ளார் கமல் ஜி.

கதையின் நாயகனாக புதுமுகம் அறிவழகனும், நாயகியாக ஹேமா ராஜ்குமாரும் நடிக்கின்றனர், வேல ராமமூர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். சாதி மறுப்பு திருமணங்களை அங்கீகரிக்காத ஆணவக் கொலைகள் சமூகத்தில் நடந்து வருகின்றன.
இதில் தென் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதைத் தோலுரித்துக் காட்டும் விதமாகவும், காதலுக்கு மட்டுமல்ல, நட்புக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது இந்த நெல்லை சீமை என்பதையும் காட்டும் படமாக இப்படம் உள்ளது.

இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ள ஹேமா ராஜ்குமாருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.