பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் சுஜிதாவின் நிஜ திருமண வீடியோவை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்க
விஜய் தொலைக்காட்சியில் 4வது வருடத்தில் மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
ஒன்றாக இருந்த இவர்களது குடும்பத்தில் ஒரு பிரிவு ஏற்பட்டுள்ளது, இதனால் அடுத்தடுத்து குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த வார புரொமோ பார்த்து ரசிகர்கள் சீரியலை பார்த்தே ஆக வேண்டும் என்று இருக்கின்றனர்.
இந்த சீரியலில் அண்ணன்-தம்பிகளுக்கு பிடித்தமான நபராக இருந்து வருகிறார் தனம் என்கிற சுஜிதா. தமிழை தாண்டி தெலுங்கிலும் சுஜிதா சீரியல் நடிக்கிறார், தனது சொந்த யூடியூப் பக்கத்திலும் வீடியோக்கள் அதிகம் பதிவிட்டு வருகிறார்.
சுஜிதாவிற்கு நிஜ வாழ்க்கையில் ஒரு மகன் இருக்கிறார், அவரும் யூடியூப் பக்கத்தில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.
அவருக்கு திருமண நாள் வர இருக்கும் நிலையில் இன்ஸ்டா பக்கத்தில் சுஜிதாவின் திருமண வீடியோ வைரலாகி வருகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் சுஜிதாவா இது என ஆச்சரியமாக அவரது திருமண வீடியோவை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.