எல்லையே இல்லா மகிழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலம் சுஜிதா- காரணம் என்ன தெரியுமா?
விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். எதார்த்தமான கதைக்களத்தில் அண்ணன்-தம்பிகள் பாசத்தை உணர்த்தி, கூட்டு குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதை காட்டி வருகிறது இந்த தொடர்.
அண்மையில் நடந்த விஜய் டெலிவிஷன் விருது விழாவில் இந்த தொடருக்கு விருதுகள் கிடைத்தன. மக்கள் கொண்டாடும் தொடர், சிறந்த நாயகன் போன்றவற்றில் விருது கிடைத்தது.
தற்போது தொடரில் மக்களால் அதிகம் சந்திக்கப்படும் ஒரு விஷயம் பற்றி காட்டி வருகிறார்கள். அதாவது கருத்தரிப்பு குறித்து இப்போது தொடரில் முக்கியமான விஷயம் ஓடிக் கொண்டிருக்கிறது.

சுஜிதாவுக்கு கிடைத்த விருது
இந்த தொடரில் தனம் என்ற கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் இருந்து நடித்து வருபவர் சுஜிதா. தற்போது இவருக்கு தெலுங்கானா மாநிலத்தில் ஒரு உயரிய விருது ஆளுநர் கையால் கிடைத்துள்ளது.
சிறந்த ரோல் மாடலுக்கான விருது சுஜிதாவுக்கு கிடைத்துள்ளது.
இதோ அந்த புகைப்படம்,
பீஸ்ட் 200 கோடி வசூல் உண்மையா...உடைத்து பேசிய திருப்பூர் சுப்ரமணியம்