நடுத்தெருவுக்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. மீனா அப்பாவின் வில்லத்தனம்
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரை ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இந்த சீரியலில் குடும்பத்தை பிரித்து இருந்த கதிர் - முல்லை ஜோடி மீண்டும் வீட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டார்கள்.
தற்போது இந்த விஷயத்தை பற்றி மீனாவின் அப்பாவுக்கு தெரியவருகிறது. அவர்கள் கொடுப்பதாக சொன்ன பணத்தை கொடுத்துவிட்டார்களா என கேட்க, கண்ணன் 10 லட்ச ரூபாய்க்கான செக் கொண்டு வந்து காட்டுகிறார்.
நடுத்தெருவில் குடும்பம்
"இதை எதிர்பாக்கல..ல" என சொல்லி மீனாவின் அப்பாவிடம் மொத்த பேரும் வாக்குவாதம் செய்ய, அவர் கோபமாக வில்லத்தனத்தை காட்ட தொடங்கிவிட்டார். இந்த வீட்டை எப்போ காலி பண்ணி தரீங்க என கேட்டுவிடுகிறார் .
மேலும் அவர் ஏளனமாக பேச மூர்த்தியும் உடனே காலி செய்வதாக கோபத்துடன் கூறிவிடுகிறார். நடுத்தெருவுக்கு மொத்த குடும்பமும் வந்துவிட்ட நிலையில் கதிர் அவர் தங்கி இருந்த வீட்டுக்கு கூட்டி செல்கிறார்.