முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ
பாண்டியன் ஸ்டோர்ஸ்
மயிலின் பெற்றோர் கொடுத்த புகாரின் காரணமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ள அனைவரையும் போலீஸ் கைது செய்துவிட்டனர்.

இதன்பின் கோமதியின் அண்ணன்கள் முத்துவேல் மற்றும் சக்திவேல் போலீசிடம் பேசினார்கள். இதனால் அரசி மற்றும் ராஜி ஆகிய இருவரை மட்டும் அழைத்து செல்லலாம். மற்றவர்களை நீதிமன்றத்தில் வாதாடி வெளியே கொண்டு வாங்க என போலீஸ் அதிகாரி கூறியிருந்தார்.
அதன்படி, தற்போது நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு வருகிறது. மயிலின் பெற்றோர் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து பேசுகிறார்கள்.
சிறையிலிருந்து வெளிவரும் குடும்பம்
இந்த நிலையில், கோமதியின் அண்ணன்கள் முத்துவேல், சக்திவேல் தங்கள் தங்கையின் குடும்பத்தை காப்பாற்ற சாட்சி கூறி, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை சிறையில் இருந்து வெளியே எடுக்கிறார்கள். இவர்களின் உதவியால் நெகிழ்ந்துபோகும் பாண்டியன், முத்துவேல் கையை பிடித்துக்கொண்டு அழுகிறார்.

இதன்பின் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும், முத்துவேல் - சக்திவேல் குடும்பமும் இணையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.