சீரியல் நடிகர்கள் என்றாலே, நாயகியாக முதல் பட மேடையில் வருந்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை... அப்படி என்ன நடந்தது?
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ், விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ரசிகர்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகும் ஒரு தொடர்.
முதல் பாகம் அண்ணன்-தம்பிகளின் பாசத்தை உணர்த்தும் வகையில் அமைய இப்போது அப்பா-மகன்களின் பற்றிய கதையாக உள்ளது. தற்போது கதையில் பழனி, பாண்டியன் வைத்துள்ள அதே இடத்தில் கடை திறந்துள்ள விஷயம் தான் பரபரப்பாக செல்கிறது.

நடிகை ஹேமா
இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 2 பாகங்களின் மூலம் மக்களால் கொண்டாடப்படும் நாயகியாக மாறியவர் நடிகை ஹேமா. இவர் இப்போது நெல்லை பாய்ஸ் என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை ஹேமா பல கசப்பான அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். அதில் அவர், தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு சிறிய வேண்டுகோளை வைப்பதாகக் கூறி தனது மோசமான ஆடிஷன் அனுபவங்களைப் பகிர்ந்தார்.
நான் நிறைய படங்களின் ஆடிஷன்களுக்குச் சென்றிருக்கிறேன். அப்போது என்னிடம் சீரியல் நடிகை தானே நீங்கள் என எங்களை ஒரு வரிசையில் தனித்துவப்படுத்துவார்கள், ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தை வழங்குவார்கள்.

இதனால் மனமுடைந்து இந்த பக்கமே வரக் கூடாது என நினைப்பேன். சீரியலே எனக்குப் போதும், அங்கேயே நான் ராணியாக இருந்து கொள்கிறேன் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டேன். சீரியல் நடிக்கும் பல பிரபலங்கள் நல்ல திறமைகளுடன் இருக்கிறார்கள்.
தயவுசெய்து சீரியலில் நடிப்பவர்களுக்கும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுங்கள் என பேசியுள்ளார்.