பட வாய்ப்பு.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமாவை அசிங்கப்படுத்தியது யார்?
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா ரோலில் நடித்து பாப்புலர் ஆனவர் ஹேமா ராஜ்குமார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ம் சீசனிலும் அவர் நடித்து வருகிறார்.
சின்னத்திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் ஹேமாவை படவாய்ப்பு தருவதாக ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் மேனேஜர் அசிங்கப்படுத்தியதாக ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

வாய்ப்பு கொடுக்குறதே பெரிய விஷயம்
ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு அதற்காக சம்பளமும் பேசப்பட்டு உறுதி செய்திருக்கின்றனர். ஆனால் சில நாட்கள் கழித்து அந்த நிறுவனத்தின் மேனேஜர் போன் செய்து சம்பளத்தை குறைக்க வேண்டும் என கூறினாராம்.
அது முடியாது என நடிகை கூற "இந்த மூஞ்சுக்கு வாய்ப்பு கொடுக்குறதே பெரிய விஷயம்" என சொல்லி அவர் அசிங்கப்படுத்தினாராம்.
ஆனால் அந்த படம் அதற்கு பிறகு டிராப் ஆகிவிட்டது என ஹேமா ராஜ்குமார் தெரிவித்து இருக்கிறார்.

மோடியிடம் கோரிக்கை வைத்த பாகிஸ்தான் பெண்: 2வது ரகசிய திருமணம்! கணவர் மீது குற்றச்சாட்டு News Lankasri
வன்முறையை தூண்ட அழைத்தால் மதுரை மக்கள் பொடனியில் அடித்து விரட்டுவார்கள் - முதல்வர் ஸ்டாலின் IBC Tamilnadu