பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மீனாவிற்கு ஸ்பெஷல் டே- சூப்பர் புகைப்படம் வெளியிட்ட நடிகை
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.
அண்ணன்-தம்பிகளின் பாசக் கதையை மையப்படுத்தி எடுத்துள்ள இந்த தொடரில் சமீபத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்த வண்ணம் உள்ளன.
தனத்திற்கு இருக்கும் பிரச்சனை வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரியவந்து அவரை குணப்படுத்தி தொடரை முடித்துவிடுவார்கள் என கூறப்படுகிறது.
மீனா போட்டோஸ்
இந்த தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஹேமா. அண்மையில் இவர் பிரம்மாண்டமாக ஒரு வீட்டை கட்டியுள்ளார், வீட்டை வீடியோ எடுத்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.
அண்மையில் நடிகை ஹேமாவிற்கு பிறந்தநாள் வந்துள்ளது. அன்று எடுக்கப்பட்ட ஸ்பெஷல் புகைப்படங்களை அவர் வெளியிட ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் 2ம் பாகம் வருகிறதா?- இப்படிதான் கதை நகருமா?