பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஹேமாவிற்கு திடீரென நடந்த ஆபரேஷன்- என்ன ஆனது, அவரே வெளியிட்ட வீடியோ
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மீனா என்கிற ஹேமா. இவர் சினிமாவில் 8, 9 வருடங்களுக்கு மேலாக நடித்து வருகிறார், ஆனால் பெரிய அங்கீகாரம் பெற்றது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் தான்.
இதில் அவரது கதாபாத்திரத்தை நல்லது என்றும் கூற முடியாது வில்லி என்றும் சொல்ல முடியாது. நேரத்திற்கு ஏற்றார் போல அவரது கதாபாத்திரம் இருக்கும்.
தற்போது கதையில் திடீர் திருப்பங்கள் நடந்து வருகிறது, அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என ரசிகர்கள் ஆர்வமாக பார்த்து வருகிறார்கள்.
திடீரென ஆபரேஷன்
நடிகை ஹேமாவிற்கு திடீரென ஆபரேஷன் நடந்துள்ளது. சில மாதங்களாக ஹேமாவின் கழுத்துக்கு கீழான பகுதியில் நான்கு சென்டிமீட்டர் அளவில் கட்டி ஒன்று இருந்துள்ளது. இதைப் பற்றி டாக்டரிடம் செக் செய்த பின்னர் இது கேன்சர் கட்டியாக மாறிவிடுமோ என்ற பயத்தில் ஆபரேஷன் செய்ய முடிவு செய்திருக்கிறார்.
பெண்கள் தங்கள் உடல் பகுதியில் இருக்கும் கட்டிகளை அலட்சியம் காட்டவேண்டாம். உடனே மருத்துவரை பார்ப்பது நல்லது என்று கூறி தனக்கு நடந்த ஆபரேஷன் குறித்தும் வீடியோவாக வெளியிட்டுள்ளார் நடிகை ஹேமா.
இதோ அவர் வெளியிட்ட வீடியோ,

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
