மது அருந்தியவர் போல் நடிக்க பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா இவ்வளவு கஷ்டப்பட்டுள்ளாரா?- அவரே வெளியிட்ட வீடியோ
பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் தொலைக்காட்சியில் 3 வருடங்களாக ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அண்ணன்-தம்பிகளின் பாசத்தை உணர்த்தும் இந்த தொடரில் கடந்த வாரங்கள் எல்லாம் சோகத்தின் உச்சமாக கொஞ்சம் போர் அடிப்பதாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர்.
ஆனால் இந்த வாரம் அப்படியே செம ஜாலியாக இருந்தது. அதிலும் மது அருந்திவிட்டு ஜீவா செய்த கலாட்டாக்கள் மக்களால் அதிகம் கொண்டாடப்பட்டது, பலரும் அவரின் காட்சிகளை சிரித்து மகிழ்ந்துள்ளார்கள்.
இந்த நிலையில் ஜீவா என்கிற வெங்கட் தனது இன்ஸ்டாவில், எனது காட்சிகளை பார்த்து மக்கள் சிரித்து மகிழ்ந்ததாக எனக்கு கமெண்ட் செய்கின்றனர், அது சந்தோஷமாக இருக்கிறது.
ஆனால் சிலர் நிஜமாக மது அருந்திவிட்டு நடித்தீர்களா என கேட்கின்றனர், அவர்களுக்கு நான் இந்த காட்சி நடிக்க என்னென்ன செய்தேன் என்ற வீடியோ இதோ என ஒரு குட்டி வீடியோவை அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
இதோ பாருங்கள்,