பெரிய உண்மை தெரிந்தும் மறைக்கும் கண்ணன், ஐஸ்வர்யா அதிரடி- பாண்டியன் ஸ்டோர்ஸில் வெடிக்கப்போகும் பிரச்சனை
பாண்டியன் ஸ்டோர்ஸ் வழக்கமான அதன் எதார்த்தத்தைவிட்டு வேறொரு டிராக்கில் சென்றுகொண்டிருக்கிறது என்பது ரசிகர்களின் தற்போது பேச்சாக உள்ளது.
கூட்டு குடும்பம் என அழகாக முதலில் அவர்கள் காண்பித்ததை போல் இப்போது செய்வதில்லை, கதை வேறு மாதிரியாக இருக்கிறது என ரசிகர்கள் வருத்தப்பட்டு தான் வருகிறார்கள்.
கடந்த சில நாட்களாக அவர்கள் கஷ்டப்பட்டு ஒரு பெரிய கடையை திறக்க முயற்சிக்க ஆனால் கடைசியில் அதை திறக்க முடியாமல் பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள்.
அந்த பிரச்சனையே கண்ணனால் தான் வந்தது, இதனால் கடையை திறக்க விடாமல் செய்கிறார்கள் என்பது அவருக்கு தெரிந்தும் அதை வீட்டில் கூற மறுக்கிறார். ஆனால் ஐஸ்வர்யா அதெல்லாம் தவறு கூற வேண்டும் என எவ்வளவோ கூறியும் இப்போதைக்கு வேண்டாம் என கண்ணன் கூறுகிறார்.
கண்ணன் உண்மை மறைத்தது அனைவருக்கும் தெரிந்தால் கண்டிப்பாக பிரச்சனை வரும் என்கின்றனர் சீரியல் ரசிகர்கள்.