துளி கூட மேக்கப் போடாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை வெளியிட்ட புகைப்படம்.. இணையத்தில் வைரல்
ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் இருக்கும் சீரியலில் ஒன்று, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் சமூக வலைத்தளத்தில் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே கொண்டுள்ளது.
அதே போல், மாபெரும் ரசிகர்கள் பட்டாளத்தை தனது நடிப்பினால் சேர்த்தவர் மறைந்த நடிகை சித்ரா. நடிகை சித்ராவின் மரணத்திற்கு பிறகு தற்போது முல்லை கதாபாத்திரத்தில் நடிகை காவ்யா அறிவுமணி என்பவர் நடித்து வருகிறார்.
இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு முன் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சீரியல் மூலம் புகழை பெற்றுள்ள இவர், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை பதிவிடுவார்.
அந்த வகையில் தற்போது துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை காவ்யா அறிவுமணி. அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..