பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் எடுத்த அதிர்ச்சி முடிவு! ஷாக் ஆன அவரது ரசிகர்கள்
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஒரு காலத்தில் அந்த தொடருக்கு அதிக டிஆர்பி ரேட்டிங் கிடைத்து டாப் 5 லிஸ்டில் இடம்பிடித்து வந்தது. ஆனால் தற்போது கதையில் பரபரப்பு குறைந்த நிலையில் ரேட்டிங்கும் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
கூட்டு குடும்ப கதையில் உருவாகி வரும் இந்த சீரியலில் நடிகர் குமரன் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார். கதிர் என்ற ரோலில் அவரது நடிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அதிர்ச்சி முடிவு
குமரன் இனி சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருக்க போவதாக கூறி இருக்கிறார். இதனால் அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர்.
ஆனால் தனது அட்மின் இனி அப்டேட்களை பதிவிடுவார் என கூறி இருக்கிறார் குமரன்.