மறைந்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் வெங்கடேஷ் குறித்து, பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனின் உருக்கமான பதிவு
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிகவும் பிரபலமான தொடர் தான் பாரதி கண்ணம்மா, இந்த ஒரு சீரியலுக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர்.
மேலும் இதில் கதாநாயகியாக நடித்து வரும் கண்ணம்மாவின் அப்பாவாக நடித்தவர் தான் பிரபல நடிகர் வெங்கடேஷ், இவர் இந்த சீரியல் விஜய் டிவி மற்ற முக்கிய தொடர்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் வெங்கடேஷ் திடீரென்று மாரடைப்பால் மரணம் அடைந்ததாக வெளியான தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது.
மேலும் இவரின் மறைவு குறித்து சின்னத்திரையை சேர்ந்த பல நட்சத்திரங்களும் சமூக வலைத்தளத்தில் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் நட்சத்திரம் குமரன் வெங்கடேஷ் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆம், "நான் உடன் பணியாற்றிய சிறந்த நடிகர்களில் இவரும் ஒருவர், இவரின் மறைவு அதிர்ச்சியாக உள்ளது. R.I.P அப்பா" என பதிவிட்டுள்ளார் குமரன்.
வரலாற்றிலேயே இப்படி ஒரு டம்மி முதலமைச்சரை பார்த்தது கிடையாது - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் IBC Tamilnadu